ஷா ஆலம், இரண்டாம் படிவ மாண வரை காலணியால் அடித்ததாக கூறப்படும் பள்ளி கட்டொழுங்கு ஆசிரியரை புலன் விசாரணை செய்ய சிலாங்கூர் கல்வி இலாகா ஒரு சிறப்புக் குழுவை அமைத்து இருக்கிறது. காப்பார் தெற்கு இட்ரிஸ் ஷா இடைநிலைப் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்தபோது தான் மிக சோர்வாகவும், எரிச்சலாகவும் நிதானம் இழந்த நிலை யிலும் இருந்ததாக அந்த ஆசிரியர் சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது என்று காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன் குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பிலான ஒரு மகஜரை சிலாங்கூர் கல்வி இலாகாவின் அலுவலகத்திடம் சமர்ப்பிக்க மாணவர் அலெக்ஸ் டேனியல் திவ்யநாதன், அவரின் குடும்பத்தார் ஆகியோருடன் சென்ற அவர் கல்வி இலாகா அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.இலாகா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளில் மாணவரின் குடும்பத்தினர் மனநிறைவு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் நடைமுறை நடவடிக்கைகள் மட்டுமே. புலன் விசாரணைக்குப் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் எடுக்கப்படும் இறுதி முடிவே முக்கியம் என்றார் அவர். சிறப்புக் குழுவை அமைத்து இருக்கும் மாநில கல்வி இலாகா அந்த கட்டொழுங்கு ஆசிரியரை கிள்ளானில் உள்ள தனது அலுவலகத்திற்கு பணிமாற்றம் செய்திருக்கிறது. அவர் புலன் விசாரணை முடியும் வரையில் அங்கு பணிபுரிவார். அலெக்ஸ் கடந்த செவ்வாய்க் கிழமை மாலை 5.30 மணியளவில் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்