குவாந்தான், இந்நாட்டில் 300,000 இந்தியர்கள் அடையாள அட்டை அல்லது குடியுரிமை இன்றி இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை தேசியப் பதிவு இலாகா (ஜே.பி.என்) மறுத்துள்ளது. நாடு முழுவதும் மை டஃப்தார் இயக்கம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2011-இல் முதல் இயக்கம் தொடங் கப்பட்டது. இரண்டாவது இயக்கம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி தொடங்கி நாடு தழுவிய நிலையில் 19 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ்வியக்கத்தின் கீழ் இதுவரை 1,813 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. அந்த 3 லட்சத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிக, மிகக்குறைவாகும் என்று பதிவு இலாகாவின் தலைமை இயக் குநர் டத்தோ முகமட் யாஸிட் ரம்லி விளக்கம் அளித்தார். சிறப்பு அமலாக்கப் பிரிவு, பிரதமர் துறை இலாகா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பதிவு இயக்கம் குவாந்தானில் 4 இடங்களிலும் (நேற்று) பினாங்கில் செபராங் பிறை, பகாங்கில் தெமர்லோ ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜூன் 22-ஆம் தேதி புத்ரா ஜெயாவில் பூர்த்தியடையும் என்று அவர் சொன்னார். அந்த 1,813 விண்ணப்பதாரர்களில் 1,018 பேர் ஆலோசனை பெறுவதற்கு, பாரங்கள் பெற்றுச்செல்வதற்கு அல்லது இதற்கு முன்பு தாங்கள் செய்திருந்த விண்ணப்பம் பற்றிய விளக்கம் பெறுவதற்கு வந்திருந்தனர் என்றும் அவர் விவரித்தார். இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் மற்ற இனத்தவரிடமிருந்தும் பதிவு இலாகா விண்ணப்பங்களை பெற்றது. இன வேறுபாடு பாராமல், பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இப்பதிவின் போது எங்களை அணுகும்படி நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்த முகமட் யாஸிட், முடிந்த வரை விரைவில் இந்த ஆவண பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பதாக உறுதியளித்தார். இதனிடையே, நாட்டில் இந்தியர்களின் மக்கள் தொகையே 21 லட்சமாக இருக்கும்போது அந்த 3 லட்சம் எங்கிருந்து வந்தது என்று சிறப்பு அமலாக்க பிரி வின் தலைவர் ஜி.கே.ஆனந்தன் கூறினார். பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை, குடியுரிமை தொடர்பில் மை டஃப்தார் இயக்கம் இதுவரை 12,000 விண் ணப்பங்களை பெற்றுள்ளது. அவற்றில் 7,000 விண்ணப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது. எஞ்சியவை இன்னும் பரிசீலனையில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்