பெட்டாலிங் ஜெயா, அன்றாட உணவில் பிரதானப் பொருட்களான நூடுல், உருளைக் கிழங்கு, கீரை உள்ளிட்ட 60 உணவுப் பொருட்கள் பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்புக்கு உள்ளாகும் எனும் ஓர் ஆணையை சுங்கத்துறை ரத்து செய்துள்ளது என அதன் தலைமை இயக்குநர் சுப்ரமணியம் துளசி நேற்று கூறியுள்ளார். கடல் உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள், டீ, காப்பி, நறுமண மசாலைப் பொருட்கள் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு உள்ளாகும் என முன் னதாக சைனா பிரஸ் தகவல் வெளியிட்டிருந்தது. ஜூன் 6இல் அரசிதழில் வெளியிடப்பட்ட 2017 ஜிஎஸ்டி திருத்த ஆணையை ஊடகம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அவ்விஷயத்தை சுங்கத்துறை நிதியமைச்சுடன் கலந்து பேசியது. அதையடுத்து உத்தேச வரி விதிப்பை ரத்து செய்யும் முடிவை சுங்கத் துறை மேற் கொண்டது என்றார் சுப்ரமணியம். குறிப்பிட்ட பொருட்களுக்கு 6 விழுக்காட்டு பொருள் சேவை வரி விதிப்பு நடவடிக்கையை அரசாங்கம் 2015 ஏப்ரலில் அறிமுகப்படுத்தியது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்