img
img

காப்பார் தொகுதியில் சொல்லில் அடங்காத மக்கள் துயரம். என்ன செய்கிறார் மணிவண்ணன்?
செவ்வாய் 20 ஜூன் 2017 12:20:27

img

இத்தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 152,000 ஆகும். இந்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள மொத்த 120,081 வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாகும். காப்பாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் இந்தியர்கள் 21,330 பேராகும். ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றியை இந்தியர்களே முடிவு செய்கின்றனர். அதன் காரணமாகவே காப்பார் நாடாளுமன்றத் தொகுதி மஇகாவின் பாரம்பரிய தொகுதியாகவே இன்று வரையில் நிலைநாட்டப்பட்டு வருகிறது. 1959 முதல் 1963 வரை காப்பார் சொந்த நாடாளுமன்றத் தொகுதியை கொண்டிருந்தது. அதன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஹம்சா ஹாலாங். 1963 ஆம் ஆண்டு காப்பார் நாடா ளுமன்றத் தொகுதி அகற்றப்பட்டு, கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் காப்பார் ஒரு சட்டமன்ற தொகுதியாக பரிணாமம் கண்டது. இந்த சட்டமன்றத் தொகுதி 1973 வரையில் நீடித்தது. 1974 ஆம் ஆண்டு, படகு சின்னத்தை கொண்ட கூட்டணி கட்சி, தேசிய முன்னணியாக மாறி, தராசு சின் னத்தை அறிமுகப்படுத்திய போது, காப்பார் சட்டமன்றம் கோலக்கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதிக்குள் சேர்க்கப்பட்டது. பின்னர் 1986 முதல் இன்று வரையில் காப்பார் தனிநாடாளுமன்றத் தொகுதியை கொண்டுள்ளது. நாட்டில் அதிகமான தோட்ட மக்களை உள்ளடக்கிய ஒரு பகுதி என்றால் காப்பார் என்று சொல்லும் அளவிற்கு மட்டுமல்ல, தேசிய முன்னணியின் மிகப் பெரிய விசுவாசியாக இந்தியர்களை மாற்றியவர் மறைந்த டத்தோ த.ம. துரை ஆவார். தேசிய முன்னணி சார்பில் யார் போட்டியிடுகிறார் என்பது முக்கி யமல்ல. எங்களின் வாக்குகள் தராசுக்குதான் என்று உறுதி செய்யும் அளவிற்கு ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் தங்களின் வாக்களிப்பு கடமையை நிறைவேற்றிய மக்களாக இந்தியர்கள் இருந்துள்ளனர். இதன் காரணமாக 1986 ஆம் ஆண்டு காப்பார் தனி நாடாளுமன்றத் தொகுதியாக மாறிய போது, இந்திய வேட்பாளர்களே இத்தொகுதியில் போட்டியிட்டு வந்துள்ளனர். மஇகாவில் மட்டுமல்ல. எதிர்க்கட்சியில் வேட்பாளராக நிறுத்தப்படுபவரும் இந்தியர்களாகவே இருந்து வந்துள்ளனர். ஜி.வி. காத்தையா, ஹரிகரன், இஸா போன்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக விளங்கி வந்துள்ளனர். 1986 ஆம் ஆண்டு காப்பார் தனி நாடாளுமன்றத் தொகுதியாக மாறிய போது, அத்தொகுதியில் மஇகா சார்பில் போட்டியிட்டவர் டி.பி.விஜேந்திரன் ஆவார். உள் ளூர் வேட்பாளர்களை புறக்கணித்த நிலையில் காப்பார் மஇகா தொகுதியின் சக்தி வாய்ந்த தலைவராக விளங்கிய த.ம.துரைக்கு 1982 ஆம் ஆண்டில் டிங்கில் சட்டமன்றத் தொகுதியை வழங்கியதன் காரணமாக அவர் காப்பார் மக்களை சமாதானப்படுத்தும் தூதராக விளங்கினார். அதன்பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் 1990 முதல் 1995 வரையில் டத்தோ எம். மகாலிங்கம், 1995 முதல் 1999 வரையில் டாக்டர் லீலா, 1999 முதல் 2004 வரையிலும் பின்னர் 2004 முதல் 2008 வரை டத்தோ கோமளாதேவி அதாவது தேசிய முன்னணியை மக்கள் வெறுக்கும் வரையில் காப்பாருக்கு வெளியே மஇகா சார்பில் வான்குடை வேட்பாளர்களே நிறுத்தப்பட்டு வந்தனர். கோலாலம்பூரை தளமாக கொண்ட இவர்களில் ஆண்டுக்கணக்கான சேவையில் மிகுந்த அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் இருந்த காப்பார் இந்தியர்கள் 2008 இல் ஏற்பட்ட அரசியல் சுனாமியிலும் தேசிய முன்னணி வேட்பாளர் கோமளாதேவியை தோற்கடித்து, பி.கே.ஆர். வேட்பாளர் எஸ். மணி வாசகத்தை தேர்வு செய்தனர். காப்பார் உள்ளூர்வாசி பலராமன் என்பவர் இது குறித்து கூறுகையில் ‘தெரிந்த பேயை விட தெரியாத பேய்க்கு வாக்களித் தோம்’ என்பதுதான் உண்மை என்கிறார் மனம் உடைந்த நிலையில். மாணிக்கவாசகம் பி.கே.ஆர். வேட்பாளராக வந்த பின்னர் மக்கள் அவரின் சேவையை நாடினாலும் பல்வேறு வெட்டுக்குத்துச் சண்டைகளுக்கு உள்ளே செல்கின்றவர்களுக்கு வக்காளத்து வாங்கி அவர்களை வெளியே கொண்டு வருகிறார் என்ற பெரும் குற்றச்சாட்டையும் உள்ளூர் மக்கள் முன்வைத்தனர். அடுத்த பொதுத் தேர்தலில் அவரை தோற்கடிப்பதே உறுதி என்ற ஒரு மனநிலைக்கு வந்தாலும் மஇகா சார்பில் காப்பார் தொகுதிக்கு போட்டியிடுபவர் உள்ளூர்வாசியான தொகுதி தலைவரும் பட்டதாரியுமான டத்தோ த. கணேசன் என்பவர் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில் அவரையே தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதியை மஇகா மீட்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், 2013 பொதுத் தேர்தலில் கணேசனை தட்டிவிட்டு மஇகாவின் பொதுச் செயலாளர் சக்திவேல் நிறுத்தப்பட்டதால் அதிருப்தியடைந்த மஇகா உறுப்பினர்கள் உட்பட காப்பார் இந்தியர்கள் வேறுவழியின்றி பி.கே.ஆர். சார்பில் வான்குடை வேட்பாளராக நிறுத்தப்பட்ட கோலாலம்பூரை சேர்ந்த ஒரு வழக்கறிஞரான மணிவண்ணன் கோவிந்தசாமியை ஆதரித்தனர். தேர்தலில் நான்கு முனைப்போட்டியில் மணிவண்ணனுக்கு 69,849 வாக்குகளும் சக்தி வேலுவிற்கு 46, 059 வாக்குகளும் கிடைத்தன. தற்போது காப்பார் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மணிவண்ணன், கடந்த நான்கு ஆண்டு காலமாக இருந்து வரும் வேளை யில் காப்பார் மக்கள் குறிப்பாக இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை எந்த அளவிற்கு காது கொடுத்து கேட்கிறார் என்று தொகுதியை சேர்ந்த மக்களை கேட்கும் போது ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. தொகுதி பக்கமே வராத ஒரு நபராகவே அவர் இன்று வரையில் இருந்து வந்துள்ளார் என்பது காப்பார் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்தில் அவர் காட்டிய அக்கறைகூட காப்பார் மக்கள் விவகாரத்தில் காட்டவில்லை என்கின்றனர். காப்பாரின் பிர தான சாலையாக விளங்கும் ஜாலான் புக்கிட் கிராயோங் சாலை குண்டும் குழியுமாக இருக்கின்றன. மக்கள் அந்த பாதையைப் பயன்படுத்தவே அஞ்சு கின்றனர். மலை காலங்களில் சாலையில் உள்ள குண்டு குழிகளில் மழை நீர்த் தேங்கி நிற்கின்றன. ஒவ்வொரு நாளும் விபத்துகள் நடக்கின்றன. இது குறித்து பல புகார்கள் கொடுக்கப்பட்டும் பொதுப்பணி அமைச்சு கண்டு கொள்ளவில்லை. கிள்ளான் நகராண்மைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த சாலைப்பிரச்சினைக்கு எந்த அளவிற்கு மணிவண்ணன் தீர்வு கண் டுள்ளார் என்று வினவுகின்றனர் காப்பாரையொட்டியுள்ள ஜாலான் ஆக்கோப் தோட்டம், அத்லோன் தோட்டம், புக்கிட் கிராயோங் மற்றும் புக்கிட் செராக்கா மக்கள். பெர்லிஸ் மாநிலத்தை விட அதிகமான வாக்காளர்களைக் கொண்ட காப்பாரில் உள்ள கிளினிக்கில் ஐந்து மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். மேலும் இருவர் குழந்தைகள் பிரிவில் உள்ளனர். அதில் ஒருவர் கிராமப்புற சுகாதார கவனிப்புக்கு சென்று விடுகிறார். நாள் ஒன்றுக்கு சராசரி 300 முதல் 400 பேர் காப்பார் கிளினிக்கிற்கு வருகின்றனர். ஒவ்வொருவரும் 3 முதல் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல்தான் இன்றும் உள்ளது என்கிறார் பூங்கோதை என்பவர். ஒரு மாநிலத்தில் உள்ள மக்களைவிட அதிகமான ஜனத்தொகையை கொண்டு வரும் காப்பார் கிளினிக்கிற்கு ஐந்து மருத்துவர்கள் போதுமா? அதில் அவர் களில் யாராவது அவசர விடுப்பு எடுத்து விட்டால் நிலைமை படுமோசமாகி விடுகிறது. ஒவ்வொரு நாளும் வெளிநோயாளிகளின் அவதிகள் சொல்லிக் அடங்காது என்கிறார் பூங்கோதை. காப்பாரில் இந்தியர்களுக்கு காலங்காலமாக உள்ளது இந்து மயானம். இதனை காப்பார், ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலய நிர்வாகத்தின் மேற்பார்வையில் உள்ளது. இங்கு உடல்களை தகனம் செய்யப்படுவதற்கு மின்தகனம் மையம் கட்டப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைாகும். இது குறித்து காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மணிவண்ணனுக்கும் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. இதுவரையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. இடுகாடும் காடு மண்டி கிடக்கிறது. சவ அடக்கத்திற்கு மக்கள் இடுகாட்டிற்கு நுழையும் போது பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். சடலங்களை தகனம் செய்வதற்கு 13 கிலோமீட்டர் தொலைவில் மேருவில் உள்ள பெஃரி பார்க் தனியார் மின்தகன மையத்தைதான் அதிக பணம் கட்டி பயன்படுத்த வேண்டியுள்ளது. இதேபோன்று இங்குள்ள பல வீடமைப்புப் பகுதிகளில் தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. அதன் ஒயரிங் முறையில் கோளாறு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இரவு நேரங்களில் பிரதான சாலையில் பஸ்சை விட்டு இறங்கும் பெண்கள், தாய்மார்கள், கர்ப்பிணிகள் இருளில் நடந்து செல்லும் அவல நிலை பல பகுதிகளில் நீடிக்கின்றன. மற்றொரு பிரதான சாலையான லோரோங் ராஜா நல்லாவில் பல மாதங்களாக கால்வாய்கள் தூர் வாரப்படாமல் இருக்கின்றன. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு டிங்கிக் காய்ச்சலால் மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். மக்கள் தங்களின் பல குறைகளை மணிவண்ணனிடமோ அல்லது அவரின் பிரதிநிதியிடமோ நேரடியாக சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. காரணம். காப் பார் நகரை காட்டி நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற மணிவண்ணன்,காப்பார் நகரில் தனது சேவை மையத்தை அமைக் கவில்லை. மாறாக ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜாலான் மேரு, செண்ட்ரல் கிள்ளானில் சேவை மையத்தை நிறுவியுள்ளார். மக்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டுமானால் இரண்டு பஸ்கள் எடுக்க வேண்டும். அதிலும் அவரின் சேவை மையம் பல நாட்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப் பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை காப்பார் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. அதேநாளில் நோன்புப்பெருநாளும் கொண்டாடப்படுகிறது. பள்ளிவாசலும் கோயிலும் அருகிலேயே உள்ளது. வாகன நெரிசல் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு மணிவண்ணன் இதுவரையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என்று வினவுகிறார்கள் உள்ளூர்வாசிகள். காப்பார் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வு கண்ணோட்டம் நாளை தொடரும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img