ஜார்ஜ்டவுன் பதினெட்டு வயது டி.நவீனை கொலை செய்ததாக பதின்ம வயதைச் சேர்ந்த நால்வர் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டது. அவர்களில் இருவர் இளம் குற்றவாளிகள் ஆவர். கடந்த ஜூன் 9-ஆம் தேதி இரவு 11 மணிக்கும் நள்ளிரவு 12 மணிக்கு இடையே ஜாலான் காக்கி புக்கிட்டில் உள்ள பூசாட் பெம்பெலாஜாரான் கர்ப்பால் சிங் கில் நவீனுக்கு மரணம் விளைவித்ததாக 18 வயது ஜே.ராகசுதன், எஸ்.கோகுலன் மீதும் 16,17 வயதுடைய மேலும் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. பினல் கோட் பிரிவு 302, 34-இன் கீழ் அவர்கள் அனைவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து எந்தவிதமான முறையீடும் பதிவு செய்யப் படவில்லை. மாஜிஸ்திரேட் முகமட் அமின் ஷாகுல் ஹமீது முன்னிலையில், அந்த நால்வரும் ஒன்றாக விலங்கிடப்பட்டு நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டனர். குற்றப்பதிவு வாசிக்கப்பட்டபோது அதை புரிந்து கொள்ளும் வகையில் தலை அசைத்தனர். அந்நால்வருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயம் செய்தது. அரசு தரப்பில் துணை வழக்கறிஞர் நுருல் ஃபாத்தின் ஹுசின் ஆஜராகியுள்ள அதே சமயம், அந்த நால்வருக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.இதற்கு முன்பு, டி.பிரவீனுக்கு கடுமையான காயம் விளைவித்ததாக அந்த நால்வர் மீதும் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நவீனின் நெருங்கிய நண்பரான டி.பிரவீன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ தினத்தன்று நவீனுடன் இவரும் தாக்கப்பட்டார். அதே நேரம், அதே இடத்தில் புரியப்பட்ட அக்குற்றத்திற்காக நீதிபதி இர்வான் சுவாய்போன் முன்னிலையில் அந்நால்வரும் விசாரணை கோரினர். ஜாமீன் வழங்க மறுத்த இர்வான், ஆகஸ்ட் 21-ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.அரசு தரப்பு சார்பில் துணை வழக்கறிஞர் லிம் சியா யி ஆஜரான அதே சமயம், அந்நால்வருக்கும் வாதாட வழக்கறிஞர் எவரும் ஆஜராகவில்லை. இத்தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள மற்றொரு 18 வயது சந்தேகப் பேர்வழி பினல் கோட் பிரிவு 118-இன் கீழ் உத்திரவாத ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், அரசு தரப்பு சாட்சியாக அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றும் வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அனுவார் ஒஸ்மான் கூறினார். சம்பவ தினத்தன்று, தனது நண்பர் டி.பிரவீனுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த நவீன் ஐவர் கொண்ட கும்பலால் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன் சிகிச்சை பயனளிக்காமல் மரணமடைந்தார்.காயங்களுடன் அவர்களின் பிடியிலிருந்து தப்பிய பிரவீன், உதவிக்கோரி நவீனின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்ட ஐவரையும் போலீசார் உடனே கைது செய்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்