அலோர் ஸ்டார், பாலர்பள்ளியின் உணவு ஏற்பாட்டு குத்தகை விவகாரத்தில் வெ.159,053.22 காசுகையூட்டை பெற்றதாக சமூக மேம்பாட்டு துறையின் இயக்குநர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மறுத்துள்ளார்.குத்தகையை குறிப்பிட்ட நபருக்கு வழங்க முகமட் அட்னான் முகமட் டவூட் (வயது 54) இரு முறை கையூட்டு பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி அஸ்மான் அபு ஹாசான் முன்னிலை வாசிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை முகமட் அட்னான் மறுத்தார்.முதல் குற்றத்தை அவர் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அலோர் ஸ்டார் மேபேங் வங்கியில் புரிந்துள்ளார். பால் மாவு, சாக்லெட் குடிபானம் ஆகியவற்றை பாலர்பள்ளிக்கு விநியோகம் செய்ய குறிப்பிட்ட நிறுவனத்திற்கு குத்தகையை வழங்குவதற்காக வெ.73 ஆயிரத்தை கையூட்டாக ஷா நிசாம் ஹலிமிடமிருந்து பெற் றுள்ளார். அடுத்த குற்றத்தை அதே வங்கியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி புரிந்துள்ளார். பாலர்பள்ளிகளுக்கு உணவு பொருட்களை விநியோகம் செய் வதற்கான குத்தகையை அதே நபருக்கு வழங்கியதற்காக வெ.86,053.22 காசை லஞ்சமாக முகமட் அட்னான் பெற்றுள்ளார்.இவர் மீது சுமத்தப்பட்ட குற் றம் நிரூபிக்கப்பட்டால் லஞ்சத் தொகையிலிருந்து 5 மடங்கு அபராதத் தொகையும் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம். முகமட் அட்னான் வெ.80 ஆயிரம் ஜாமின் தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் மேல் விசாரணை வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்