img
img

இரு கொள்ளையர்கள் சுட்டுக் கொலை!
திங்கள் 19 ஜூன் 2017 12:38:33

img

கோலாலம்பூர், பண்டார் பாரு செந்தூலில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரு கொள்ளையர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். கோலாலம்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தீவிர குற்றவியல் புலனாய்வு பிரிவினர் பண்டார் பாரு செந்தூலில் உள்ள மேம்பாட்டு இடத் திற்கு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியே இரு கார்களில் வந்தவர்களின் செயல் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அக்கார்களை போலீஸ் அதிகாரிகள் சோதனையிடுவதற்காக நிறுத்த முயன்றுள்ளனர்.ஆனால் அவ்விரு கார்களும் இரு திசையில் பிரிந்து வேகமாகச் சென்றுள்ளன. போலீஸ் அதிகாரிகளும் இரு குழுவாக பிரிந்து கார்களை துரத்தியுள்ளனர். அதில் ஒரு காரை பண்டார் பாரு செந்தூல் பள்ளிவாசலுக்கு முன் போலீசார் மடக்கியுள்ளனர். இருந்தபோதும் அக்காரை ஓட்டி வந்த நபர் போலீஸ் காரை மோதியதுடன் போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.அதனால் தங்களின் பாதுகாப்புக் கருதி போலீஸ் அதிகாரிகளும் அந்நபரை நோக்கி சுட்டதில் அந்நபர் உடலில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டரில் (ஜாலான் சிகாம்புட் பாலத்தில்) மற்றொரு காரில் தப்பிச் சென்ற ஆடவரை போலீசார் சுட்டு கொன்றதாக நேற்று காலை 10 மணியளவில் ஜாலான் சிகாம்புட்டில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கோலாலம்பூர் போலீஸ் படையின் துணைத் தலைவர் டத்தோ மஸ்லான் லாசிம் தெரிவித்தார். சுட்டுக் கொல்லப்பட்ட 26, 46 வயதுடைய ஆடவர்களின் மீது ஏற்கெனவே வீடு புகுந்து திருடுதல், போதைப்பொருள் விநியோகம், கொள்ளைச் சம்பவம், அபாயகர சுடும் ஆயுதங்கள் வைத்திருக்கும் பல குற்றப் பதிவுகள் உள்ளன. இரு கார்களை சோதனையிட்டதில் துப்பாக்கிகள், தோட்டாக்கள், 3 பாராங் கத் திகள், இரும்புகளை வெட்ட பயன்படுத்தப்படும் கருவிகள், கையுறை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக டத்தோ மஸ்லான் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img