பெட்டாலிங் ஜெயா, தனக்கு எதிராக அடிப்படை யற்ற குற்றச்சாட்டுகளை தொடுப்பவர்கள் மீது வழக்கு தொடுப்பேன் என்று டத்தின்ஸ்ரீ ரோஸ் மா மன்சோர் எச்சரித்துள்ளார். அடிப்படையற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இலக் காகி வருகிறார் என்று நூர் ஹஜ்ரான் முகமது நூர் வழக்கறிஞர் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல் எல்லாம் போலியான குற்றச்சாட்டுகளை தாங்கி வருபவை. ரோஸ்மாவின் நல்தோற்றத்திற்கு களங்கம் கற்பிப்பவை. இவரின் நற் பெயருக்கு மாசுபடுத்தும் நோக்கில் இவை எல்லாம் செய்யப்படுகிறது.சமூக வலைத்தளங்களில் காணப்படும் இதுபோன்ற அவதூறுகளை நாங்கள் அணுக் கமாக கண்காணித்து வருகிறோம். அவதூறான மற்றும் பொய்யான அறிக்கைகள் விடுப்பது குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த வழக்கறிஞர் நிறுவனம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்