img
img

ஒரு பெண் ஐஜிபி ஆவது சாத்தியமே!
திங்கள் 19 ஜூன் 2017 11:55:16

img

கோலாலம்பூர், நாட்டின் முதல் நிலை போலீஸ் அதிகாரியான, தேசிய போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரின் பதவி காலம் வரும் செப்டம்பர் மாதம் பூர்த்தியடைகிறது. தாம் 60 வயதை அடைவதாகவும் பணியிலிருந்து ஓய்வு பெறவிருப்பதாகவும் அவரே உறுதி செய்துள்ளார். டான்ஸ்ரீ காலிட் நாட்டின் 10-ஆவது போலீஸ் படை தலைவர் ஆவார். கடந்த 2013-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி அப்பதவியில் நியமனம் செய்யப் பட்டார். எனினும், இவர் தனது 19-ஆவது வயதில், 1976 டிசம்பர் 5-ஆம் தேதி போலீஸ் படையில் தனது பணியினை தொடங்கினார். தலைநகர் போலீஸ் பயிற்சிக் கழகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பயிற்சியை அவர் அப்போது தொடங்கினார். தன்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு காலிட் அளித்த நேரடியான, சுவாரஸ்யமான பதில்கள் இதோ: நீங்கள் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் ஒருவர் என்று முத்திரையிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூக வலைத்தளங் களில் உங்களை பற்றி நிறையவே பேசுகிறார்கள். இதனை நீங்கள் எவ்வாறு சமாளிக்கின்றீர்கள்? சமூக வலைத்தள அத்துமீறல்களை நான் கடுமையாகவே கருதுகிறேன். காரணம், இது நாட்டின் அமைதியையும் நலனையும் பாதிக்கிறது. பேச்சுரிமைக் கும் கட்டுப்பாடு உள்ளது என்பதை நான் நம்புகிறேன். ஆகவே இது போன்ற அத்துமீறல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலான பொறுப்பற்ற அரசியல்வாதிகளுக்கும், அரசு சாரா இயக்கங்களுக் கும் நிறைய ஆதரவாளர்கள் இருப்பதால் இணையத்தளத்தில் இது போன்ற அத்துமீறல்களை நான் கண்காணிக்க வேண்டியுள்ளது. இதனை நாம் கட்டுப் படுத்த வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரின் பேச்சுரிமையையும் போலீஸ் மதிக்கின்றது. ஆனால், எல்லா வற்றுக்கும் கட்டுப்பாடு உள்ளது. குற்றச்செயல்களை ஒழிப்பதில் நீங்கள் சந்தித்த சவால்கள்? எல்லைப்புற குற்றச்செயல்களை கண்காணிப்பதே எங்களின் மிகப்பெரிய சவாலாகும். மலேசிய - தாய்லாந்து எல்லையிலும், சபா, சரவாவிலும் ஆறு, கடல், சாலை, மலைப் பிரதேசங்களில் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதில் மிகப்பெரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகிறோம். அத்துடன் மனிதக் கடத்தல், திட்டமிட்ட குற்றச்செயல்கள், சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் என இன்னும் வேறு விதமான சவால்களை நாங்கள் எதிர் நோக்கியுள்ளோம். அண்மைய காலமாக, தீவிரவாதம் என்ற பெயரில் புதிய வகையான மிரட்டலை நாம் சந்திக்கின்றோம். எப்போதும் விழிப்புணர்வுட னும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய சூழ்நிலை இப்போது நிலவுகிறது. நீங்கள் போலீசில் சேராதிருந்தால்? ஒரு நவீன விவசாயியாக ஆக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. விவசாயம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், போலீசில் சேர்ந்ததும் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. குறைந்தது சிறிதளவு தோட்ட வேலைகளையாவது இப்போது செய்கிறேன். ஒரு பெண் நாட்டின் தலைமை போலீஸ் அதிகாரியாகும் சாத்தியம் உள்ளதா?ஏன் முடியாது? அதன் சாத்தியத்தை நான் நிராகரிக்கவில்லை. ஆனால், எப்போது என்றுதான் என்னால் சொல்ல முடியாது. சக போலீஸ் அதிகாரிகளுடன் நீங்கள் எவ்வாறு தொடர்பில் இருக்கிறீர்கள்? நான் ஐ.ஜி.பி ஆனதும் அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளையும் கொண்ட வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கினேன். அதன் பிறகு அந்தக் குழுவின் வட்டம் பெரிதானது. எல்லா நேரங்களிலும் குற்றச்செயல்கள் பற்றிய தக வல் பரிமாற்றத்திற்கு இது பேருதவியாக இருந்துள்ளது. இதனால் ஒரு நாளுக்கு குறைந்தது மூன்று தடவையாவது என் ஃபோனை சார்ஜ் செய்ய வேண்டி யுள்ளது. இவ்வாறு டான்ஸ்ரீ காலிட் பதில் சொன்னார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img