மாணவர் நவீன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருக்கு வழங்கப்படும் தண்டனை மற்ற இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என சுபாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் மோகன் சிங் தெரிவித்தார். சமீப காலமாக நாட்டில் பகடிவதை சம்பவத்தால் உயிர் பலி ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கொடுமையான செயலில் ஈடுபடுபவர் கள் எந்தவித பயமுமின்றி செயல்பட்டு வருகின்றனர். நவீன் கொலை வழக்குடன் இந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கடுமையாக தண்டனை விதிக்கப்பட வேண்டும். இது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் அதிலும் தீயச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைய வேண்டும் என அவர் சொன்னார்.பள்ளி பருவத்தில் நன்னெறி பண்புகளை படித்து அதனை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இதனை அனைவரும் கடைப்பிடித்தால் நாட் டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனை நவீன் குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமையும் வண்ணம் இருக்க வேண்டுமென மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்