மாணவன் நவீன் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது 302 சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த கொடு மையை செய்தவர்களுக்கு ஏற்றவாறே கொலைக் குற்றச்சாட்டு சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஏஎஸ்பி ராஜன் தெரிவித்தார். பகடிவதை செயல்களை விசாரணை செய்வதற்கு புதிய சட்டத்தை அமலாக்க திட்டங்கள் வகுத்துவரப்படுகிறது. இத்திட்டம் அமலுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றார் அவர். பள்ளிகளில் பயிலும் தங்களின் பிள்ளைகள் கேட்கும் பணத்தை கொடுக்கும் பெற்றோர், பிள்ளைகள் அப்பணத்தை கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில்லை. மிரட்டி பணம் பறிக்கும் மாணவர்கள் கும்பலின் செயல்களில் தங்களின் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி செயல்படும் கும்பல் மாணவர்கள்தான் பகடிவதை செயல்கள் புரிகின்றனர். இதுபோன்ற செயல்களை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். அப்படி இதுபோன்ற செயல்களில் பாதிக்கப்படும் மாணவர்கள் உடனடியாக தங்களின் பெற்றோர் அல்லது ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண் டியது அவசியம். இதுபோன்ற செயல்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீஸ் அதிகாரியான நான் பல பள்ளிகளுக்கு சென்று சொற் பொழிவுகளை நடத்தி வருவதாக அதிகாரி ராஜன் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்