img
img

ரோஸ்மா மன்சோருக்கு எதிராக மீண்டும் பிரச்சாரமா?
ஞாயிறு 18 ஜூன் 2017 15:12:53

img

கோலாலம்பூர், பிரதமரின் துணைவியான ரோஸ்மா மன்சோருக்கு எதிராக மீண்டும் தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ள எதிர்க்கட்சியின ருக்கு கண்டனம் தெரிவிக் கப்பட்டது. எதிர்க்கட்சியின் இத்தகைய போக்கினை தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் சாடினார். எதிர்க்கட்சிகள் கட்டுக்கதை களை கட்ட விழ்த்து விடுகின்றன. குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் எவ்வித ஆக்ககரமான ஆதாரங்களை கொண்டிருக்க வில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் சாலே இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமில்லாத ஒன்று. பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவது எதிர்க்கட்சியினரின் பாணி போலும். எதிர்க்கட்சியினரின் சார்பில் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து எதிர்க்கட்சியினர் குழம்பிப் போய் உள்ளனர். இத்தகைய குழப்பமான நிலையிலிருந்து மலேசியர்களின் கவனத்தை திசை திருப்பும் வண்ணம் மோசமான யுக்தியை கையாள எதிர்க்கட்சியினர் முற் பட்டுள்ளனர். பிரதமரின் துணைவியாக ரோஸ்மாவை வசைபாடுவது இத்தகைய வியூகத்தின் ஓர் அம்சமாகும் என்று அமைச்சர் சாலே சுட்டிக்காட் டினார். பக்காத்தான் ஹராப்பான் படு மோசமான காலக்கட்டத்தில் இருக்கிறது. இதன் ஆயுட் காலம் மிகவும் குறுகியது. அடுத்த பிரதமர் யார் என்ற விவகாரத் திற்கு பரிகாரம் காண பக்காத்தான் ஹராப்பான் தவறுமானால் பக்காத்தான் ராக்யாட்டிற்கு நேர்ந்த படுமோசமான கதிதான் இதற்கும் ஏற்படும் என்று சாலே தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img