(பெருஜி பெருமாள்) கோலாலம்பூர், சுங்கைபீசி TBS பஸ் நிலையத்தில் நோய்வாய்ப்பட்டு பரிதாபமாக படுத்துக் கிடந்த 52 வயது நாகமணி ஜூன் 15இல் மாலை 5.15 மணியளவில் செராஸ் Hukm மருத்துவ மனையில் காலமானார். மலேசிய உலக மனித நேய கழகத்தின் தலைவர் த.கமலநாதன் இறுதி நிலவரத்தை தீர்வைநோக்கி பகுதியிடம் நேற்று தெரிவித்தார். பஸ் நிலையத்தில் படுத்துக் கிடந்த இந்த ஆந்திர மாநிலத்து மாது, தான் அனுபவித்து வரும் நரக வேதனையை மனித நேய கழகத்திடம் விலா வாரியாக தெரிவித்திருந்தார். தற்போது பிரேதம் மருத்துவமனையின் சவக் கிடங்கில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நாகமணியின் இறுதிச் சடங்கு தொடர்பாக ஆந்திர மாநிலத்தில் உள்ள இவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்பட்டு வருகிறது. த.கமலநாதன் கோதாவரி எல்லுருபட்டு கிராமத்தில் உள்ள டிஎஸ்பி பாஸ்கராவுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். வாட்ஸ் ஆப் வழி விவரங்கள் எல்லாம் அனுப்பப் பட்டுள்ளன. துளியளவும் கருணை இல்லாமல் சம்பந்தப்பட்ட மோகனா என்ற ஏஜென்சி இந்த நோயாளியை நிர்கதியாக்கி விட்டுள்ளது. ஆய்ஷா என்பவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நாகமணியை ஆய்ஷாவின் மகன் ஜொகூர் பாருவிலிருந்து டிபிஎஸ் பஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். இப்போதைய பிரச்சினை என்னவெனில், நாகமணியின் இறுதிச் சடங்கு இவரின் பையில் பைபிள் காணப்பட்டது. இவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று இன்னும் திட்டவட்டமாக கண்டறியப்படவில்லை. பிரேதம் நாகமணியின் குடும்பத்தினருடன் ஒப்படைப்பதா? அல்லது இங்கேயே நல்லடக்கம் செய் வதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் அனுமதி பெற்ற பிறகே முடிவு செய்யப்படும் என்று கமலநாதன் தெரிவிக்கிறார். தொடர்புக்கு: 016-9744404
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்