சுங்கைப் பட்டாணி, மூன்று வயது பாலகனுக்கு போதைப்பொருள் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த காணொளியில் சம்பந்தப்பட்ட ஆடவரை போலீ சார் கைது செய்துள்ளனர். சுங்கைப் பட்டாணியிலுள்ள சுல்தான் அப்துல் அலிம் மருத்துவமனையில் அச்சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். அச்சிறு வனுடன் அங்கு தங்கியிருந்த தாயாரைக் காண வந்த 28 வயதுடைய ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட காணொளி தொடர்பிலும் சிறுவனை போதைப்பொருள் உட்கொள்ள சொன்னதற்காக அந்த ஆடவரை கைது செய்ததோடு மேல் விசா ரணைக்காக 4 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கெடா குற்றப்புலன் விசாரணை தலைவர் டத்தோ மியோர் வாஹிட் கூறினார். கடந்த புதன்கிழமை அச்சிறுவனின் தாயார் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். தன் முன்னாள் கணவனை வெறுப்பேற்றுவதற்காக அச்சிறுவனின் தாய் வேண்டுமென்றே அவ்வாறு ஒரு காணொளியை பதிவேற்றம் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த காணொளியை அம்மாதுவின் காதலன் முன்னாள் கணவரின் தாயாருக்கு அனுப்பியுள்ளார். இதன் தொடர்பில் அச்சிறுவனின் பாட்டி போலீசில் புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்