சிப்பாங், போலீசாரை தாக்க முயன்ற மூன்று அந்நிய நாட்டவர்கள் டிங்கில் ஜெண்டராம் ஹர்மோனி குடியிருப்பு பகுதியின் அருகில் துப்பாக்கியால் சுட்டு கொல் லப்பட்டனர். சிலாங்கூர் மாநில தீவிர குற்றவியல் பிரிவினர் (டி9) மேற்கொண்ட ஓப்ஸ் ரந்தாவ் சிப்பாங் எனும் அதிரடி நடவடிக்கையில் இம்மூவரும் அதிகாலை 4 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் கருப்பு நிற ஆடையில் மூவரை குடியிருப்பு பகுதிக்கு பின்னால் உள்ள காட்டு பகுதியில் கண்டுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை சோதனை செய்ய முயன்றபோது, அவர்கள் போலீசாரை தாக்க முயன்றதுடன் பாராங் கத்தியை கொண்டு மிரட்டியுள்ளனர். போலீசாரின் எச்சரிக்கையை மீறி அம்மூவரும் பாராங் கத்தியை கொண்டு அதிகாரிகளை தாக்க முயன்றதால் அவர்களை போலீசார் சுட்டுக் கொன்றுள் ளனர். பலியானவர்களை சோதனை செய்ததில் பாராங் கத்திகள், வீட்டை உடைப்பதற்கான கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் கள் இங்குள்ள வீட்டை உடைத்து கொள்ளையிடுவதற்காக வந்தவர்கள் என நம்புவதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் அப்துல் அஸிஸ் அலி தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்