கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலத்தில் உலுசிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள செரண்டா தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத்திட்டம் என்னவானது? தரை வீடுகள் கிடைக்கும் என்று 26 ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? வாழ்வியலை இழந்தவர்களுக்கு வீடமைப்புத்திட் டத்தை நிறைவேற்றாமல் யூ.எம்.டபள்யூ. நிறுவனம் கைநழுவியதா என்ற அச்சம் தற்போது மேலோங்கியுள்ளது. வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த பலர் இயற்கை எய்திவிட்டனர். அவர்களின் வாரிசுதாரர்களும் எஞ்சியத் தொழிலாளர்களும் தர்ம சங் கடமான நிலையில் இருக்கின்றனர். இவர்களுக்கு நியாயமான தீர்வு இன்று வரை கிடைக்காததற்கு யூ.எம்.டபள்யூ ஹோல்டிங்ஸ் நிறுவனம் பதில் கூறுமா? என ஏக்கத்தோடு இன்னமும் காத்திருப்பது நியாயமா? என ஏவுகணை கேட்கின்றது. 2016ஆம் ஆண்டு வரை யூ.எம்.டபள்யூ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பெயரில் இருந்த சம்பந்தப்பட்ட வீடமைப்பு நிலம் தனியார் நிறுவனத்திற்கு மாற் றப்பட்டது உண்மையா? அப்படி மாற்றப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தினை முழுமை படுத் துவதற்கான விளம்பரங்கள் ஏன் இன்னமும் வழங்கப்படவில்லை? தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகளை ஏன் யூ.எம்.டபள்யூ நிறுவனமே கட்டித் தரவில்லை? பல மில்லியன் தொகையைக் கொண்டிருக்கும் எட்டு ஏக்கர் நிலப் பரப்பினை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப் பட்டது ஏன்? தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு நிலத்தின் உரிமையை மாற்றிய யூ.எம்.டபள்யூ நிறுவனம் ஏன் வீடுகளை இன்னமும் கட்டப்படாமல் இருப் பதற்கான காரணத்தினைக் கோரவில்லை? என்ற கேள்விக்கும் பதிலை எதிர்பார்க்கின்றது! ஏழையாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும் இருந்த செரண்டா தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமையான வீடமைப்புத் திட்டத்திற்கான நிலத்தில் தனியார் நிறுவனம் பல மில்லியன்களைச் சம்பாதிக்க விருப்பது நியாயமா? என்பன போன்ற கேள்விகளை ஏவுகணை நாளை முழுமையாக ஆய்வு செய்கின்றது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்