img
img

1எம்டிபி-டி.ஓ.ஜே விவகாரம், போலீஸ் விசாரனை செய்கிறது.
ஞாயிறு 18 ஜூன் 2017 12:02:06

img

கோலாலம்பூர், அமெரிக்காவின் நீதித்துறையினரால் (டி.ஓ.ஜே.) தற்போது கூறப்பட்டுள்ள ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான புதிய குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர். எம்.) விசாரணை செய்யாது. மலேசியாவில் உள்ள அந்த நிறுவனம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருவதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸூல்கிப்ளி அகமட் தெரிவித்தார். 1எம்.டி.பி. விசாரணை தொடர்கிறது. போலீசார் புலன் விசாரணை செய்வதற்கு கால அவகாசத்தை நாம் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 1எம்.டி.பி. விவகாரம் எங்களுடன் தொடர்புடையது அல்ல. இந்த விவகாரத்தை போலீசாரே விசாரணை செய்யவேண்டும் என்று முடிவெடுக் கப்பட் டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். போலீஸ் விசாரணையில் குறுக்கிட நாங்கள் விரும்பவில்லை ஒரே விவகாரத்தை இரு அமலாக்கத் தரப்பினர் விசா ரணை செய்வதையும் நாங்கள் விரும்பவில்லை என்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். டத்தோ ஸூல்கிப்லியின் இந்த அறிக்கை இதற்கு முன்பு போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் வெளியிட்ட அறிக்கைக்கு முரணாக இருப்பதாக கூறப்படுகிறது. 1எம்.டி.பி. விவகாரம் தொடர்பான விசாரணை முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதமே சட்டத்துறை தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்றும் தற்போது சட்டத்துறை தலைவரின் உத்தரவுக்காக போலீசார் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார். காலிட்டும் இதனை கடந்த ஜூன் 14 ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img