img
img

1எம்டிபி பலகோடி வெள்ளி திருட்டா? அவசர நாடாளுமன்றத்தை நடத்துவீர்!
ஞாயிறு 18 ஜூன் 2017 11:42:57

img

கோலாலம்பூர், அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) 1எம்டிபிக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிக்க மலேசிய நாடாளுமன்றத்தில் அவசரக் கூட் டம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் கூறுகிறார். புதிய குற்றச்சாட்டுகள் நாட்டின் நற்பெயருடன் சம்பந்தப்பட்டுள்ளதால், அக்குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டத்தை எவ்வளவு சீக்கிரத்தில் கூட்ட முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் கூட்ட வேண்டும் என்று வான் அஜிசா விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். மிக முக்கிய விவகாரங்களை விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல என்று கூறிய அஜிசா, அது முன்பும் நடத்தப்பட்டுள்ளது என்றார். ஆனால், அப்படி ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் பிரதமர் நஜீப்புக்கு மட்டுமே உண்டு. ஆகையால், டி.ஒ.ஜே. எழுப்பியுள்ள புதிய குற்றச்சாட்டுகளை விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமரை தாம் வலியுறுத்துவதாக அஜிசா மேலும் கூறினார். இது அரசாங்கம் அதன் பெயரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்றார் அவர். கடந்த வியாழக்கிழமை அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனமான 1எம்.டி.பி.யில் ஊழல் நடந்து இருப்பதாகவும் மலேசிய மக்கள் பெரியள வில் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அது அறிவித்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து தாங்கள் மேற்கொண்ட புலன்விசாரணையின் அடிப்படையில் இதனை தாங்கள் சொல்வதாக அமெரிக்க நீதித்துறை குறிப்பிட்டுள்ளது. 1 எம்.டி.பி.யில் 300 கோடி அமெரிக்க டாலர் (வெ. 1,200 கோடி) முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தங்கள் விசாரணையில் தெரிவித்துள் ளதாக அது தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.அத்துடன் அதில் 100 கோடி அமெரிக்க டாலர் (வெ.400 கோடி) மதிப்புள்ள சொத்துக்கள் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்யும் முயற்சியில் அமெரிக்க விசாரணைக் குழு ஈடுபட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 450 கோடி அமெரிக்க டாலர் (வெ.1,800 கோடி) முறைகேடு நிகழ்ந்து இருப்பதாக அமெரிக்க நீதித் துறை அனுமானமாக கணக்கிட்டுள்ளது. 1எம்.டி.பி. நிறுவனத்தின் நிதியிலிருந்து 170 கோடி அமெரிக்க டாலர் (வெ.680 கோடி) திருடப்பட்டு சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு பாய்மரக் கப்பல், தங்க நகைகள், வைரங்கள், கலை படைப்புகள் ஆகியவை அமெரிக்க நீதித் துறை பறிமுதல் செய்யவிருக்கும் சொத்துக்களில் அடங்கும். கோடிக்கணக்கான டாலர் ஏமாற்றப்பட்ட புதிய அத்தியாயம் விசாரணையின் வழி அம்பலமாகி யுள்ளது. இதில் 450 கோடி டாலர் (வெ.1,800 கோடி) திரு டப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் இடைக்கால சட்டத்துறை தலைவர் கென்னத் ஏ பிளான்கோ தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் நிறுவனத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ள ஊழல்வாதிகள் எவருக்கும் அமெரிக்கா அடைக் கலமாக அமையும், அல்லது பாதுகாப்புத் தரும் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. அமெரிக்கா தனது கடமையைச் செய்யும். சட்டவிரோதமாக திரு டப்பட்ட அல்லது சம்பாதிக்கப்பட்ட அந்தப் பணத்தை பாதிக்கப்பட்டவர்களிடையே திருப்பித் தரும் மிகப் பெரிய கடப்பாட்டை அமெரிக்கா கொண்டுள்ள தாக அவர் கூறியிருந்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img