பினாங்கு, பகடிவதைக்கு ஆளாகி, மூர்க்கத் தனமாகத் தாக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி சுய நினைவு திரும்பாமலேயே உயிர்நீத்த தனது ஆருயிர் நண்பனின் மரணச் செய்தியை பிரவீனுக்கு அவருடைய குடும்பத் தினர் 24 மணிநேரத்திற்குப் பிறகுதான் தெரிவித்தனர். தனது வலது கண்ணில் ஏற்பட்டிருந்த காயத்திற்காக பிரவீனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால், பிரவீனுக்கு உணர்ச்சி வசப்படக்கூடிய அள விலான எந்தச் செய்தியையும் சொல்லக்கூடாது என்பது மருத்துவர்களின் உத்தரவு. எனவே, நவீனின் மரணச் செய்தியை 24 மணிநேரம் சொல் லாமல் தவிர்க்க நேர்ந்ததாக பிரவீனின் மாமா எம்ஜிஆர் தேவன் தெரிவித்தார். மூர்க்கக் கும்பலால் நவீனும் பிரவீனும் தாக்கப்பட்ட சம்பவத்தில் பிரவீனின் கண்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், அந்தக் கும்பலிடம் சிக்கி சித்ரவதைக்கு உள்ளாகி, ஐந்து நாட்களுக்கு மேலாக உயிருக்கு போராடிய பிறகு நவீன் உயிரிழந்தார். பிரவீன் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். கண்ணில் நடந்த அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் ஓய்வில் இருந்த பிரவீனுக்கு அவனுடைய உயிர் நண்பனின் உயிர் பிரிந்தது குறித்து நாங் கள் சொல்லவில்லை. அவன் அடிக்கடி நவீனைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்த போதிலும் அந்தத் துயரச் செய்தியைச் சொல்லாமல் தவிர்த்து விட்டோம் என்று எம்ஜிஆர் தேவன் சொன்னார். ஆனால், 24 மணி நேரத்திற்குப் பிறகு அந்த மரணச் செய்தியை தெரிவித்த போது பிரவின் மிகவும் விரக்தி அடைந்து விட்டான். அவனால் அந்தச் செய் தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சோகத்தில் உறைந்து போய்விட்டான் என்று அவர் சொன்னார்.கண்ணீரை கட்டுப்படுத்திக் கொள்ளும்படி நாங்கள் மன் றாடிக் கேட்டுக் கொண்டோம். அவனுக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி மெல்ல மெல்ல உறங்க வைத்தோம். அவனது கண் அறுவைச் சிகிச்சைக்கு பாதகம் வந்து விடக்கூடாதே என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம் என்றார் அவர். அடுத்த சில நாட்களுக்குள் குணமடைந்து பிரவின் வீடு திரும்ப முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்