(பி.ஏ.கந்தையா) தெலுக் இந்தான், இணையத்தின் வாயிலாக சீக்கிரம் பணக்காரராகும் திட்டத்தை விளம்பரப்படுத்தி 51 பேரை ஏமாற்றி 320,000 வெள்ளியை மோசடி செய்த ஆணும் பெண் ணுமாகிய ஒரு ஜோடியினரை போலீசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி உதவி ஆணையர் ஏசிபி வான் ஹசான் பின் வான் முகமட் கூறினார். பொதுமக்கள் முதலீடு செய்யும் பாரத்தில் 10 விழுக்காடு லாப ஈவுத் தொகையை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு வழங்குவதாக உறுதியளித்த பிறகுதான் நிறைய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளனர். இத்திட்டத்தில் குறைந்தது 600 வெள்ளியைச் செலுத்தி உறுப்பினராகலாம். இந்த மோசடி சம்பவத்தில் ஒரு கும்பல் கடந்த மார்ச் மாதம் முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. புக்கிட் மெர்தாஜம், பூலாவ் பினாங்கைச் சேர்ந்த 29 வயது நிரம்பிய பெண் ஒருவர் மூளையாக செயல்பட்டுள்ளார். இணையத்தில் முதலில் தம் நடவடிக்கையைத் தொடங்கினார். 30 முதல் 50 வயது மதிக்கத்தக்க இரு ஆடவர்களும் ஒரு பெண்மணியும் 19,800 வெள்ளியை இத்திட்டத்தில் முதலீடு செய்தனர். நாள்பட நாள்பட தங் களுக்கு எந்தவிதமான லாப ஈவும் கிடைக்காததைத் தொடர்ந்து தெலுக் இந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் செய்ய விரும்புபவர்கள் 05-6222222 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம். கடந்த 14.6.2017ஆம் தேதி கைது செய்யப்பட்ட இருவரையும் நான்கு தினங்கள் தடுத்து வைப் பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் பெற்றனர். இவர்கள் குற்றவியல் பிரிவு 420இன் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது பிரம்படி அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்