இராஜேஸ்வரி கணேசன் பொதுமக்களின் பிரார்த்தனைகளைப் பொய்யாக்கி விட்டு சுயநினைவு திரும் பாமலேயே உயிர் நீத்த நவீனின் உடல், நூற்றுக்கணக்கானோரின் கண் ணீருக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பொதுமக்கள், சமூகத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்ட நவீ னின் இறுதி ஊர்வலச் சடங்கில், எங்கும் அழுகையுடன் கண்ணீர் கடல் பெருக்கெடுக்க, அந்த 18 வயது மாணவன் பூமிப்பந்திலிருந்து விடை பெற்றார். பகடிவதைக்கு ஆளான நவீன் திருமாறனின் மரணம் சட்டத்தின் கண்களை திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் அறைகூவல் விடுத்துள்ள வேளையில், நம் சமூகத்தில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் என்ன அல்லது யார் காரணம் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய ஒரு கட்டத்தையும் நாம் அடைந்து விட்டோம் என்பதுதான் உண்மை. குடும்பம் காரணமா, அல்லது சூழல் காரணமா? நாட்டின் உளவியல் ஆலோசகர்களில் ஒருவரான கே.ஏ.குணா தனது பார்வையில் கீழ்க் கண்ட தகவல்களை மலேசிய நண்பனுடன் பகிர்ந்து கொள் கிறார். பகடிவதை பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் இவர்களின் குடும்பப் பின்னணியில் பலவீனங்கள் நிறைய இருக் கும். பினாங்கில், டி.நவீனின் மரணத்திற்கு காரணமான அந்த ஐந்து மாணவர்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் குடும்பப் பின்னணியைத்தான் நாம் ஆராய வேண்டி யிருக்கிறது. உளவியல் கோட்பாடு என்ன சொல்கின்றது என்றால், மற்றவர்களை துன்புறுத்துகிற, பகடி வதை செய்கின்ற, அடிக்கின்ற, பயமுறுத்துகிற அல்லது வார்த்தைகளால் கடுமையாகப் பேசுகின்ற தரப்பினரைப் பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் சமூக விரோத குணநலன்களை கொண்டவர்களாகவே இருப்பார்கள். மற்றவர்களை அடித்து, துன்புறுத்தி ரத்தம் சொட்டக்கிடந்தாலும் சிறிதளவு கூட அவர்களுக்கு அனுதாபம் வராது. தன்னு டைய தேவைக்காக நான் என்ன வேண்டு மானாலும் செய்வேன் என்ற எண்ணம் வேரூன்றி இருக்கும். குறிப்பாக, ஆண் வர்க்கத்தினரிடையே இது அதிகமாகக் காணப்படும்.மற்றவர்களின் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். பாவம், பட்சாதாபம் எல்லாம் சாதாரணமானவர்களிடம் வேண்டுமானால் எதிர்பார்க்கலாம். ஆனால், பகடிவதை போன்ற கொடுமைகளைப் புரிபவர்களை பொறுத்த வரையில் இந்த உணர்வு செத்துப்போயிருக் கும். மற்றவர்களை துன் புறுத்தி, அவர்கள் வேதனையடைவதைப் பார்த்து சந்தோஷமடையும் ஜென்மங்கள். ‘பாத்தியா, நான் அடிச்ச அடியில அவன் எப்படி யாயிட்டான் பாத்தியா’ என்று சொல்லி பெருமைப்படுவார்கள். அவர்களுக்கு: * பரிதாபம் வராது * பட்சாதாபம் இருக்காது * பரிவு கிடையாது * சுயநலத்தின் உச்சக்கட்டத்தில் இருப்பார்கள் * தங்கள் தேவைகளை அடைவதற்கு எது வேண்டுமானாலும் செய்வார்கள் * தன் செயல் தவறு என்பதை உணரும் உணர்வு அவர்களுக்கு இருக்காது இவைதான் சமூக விரோத குணநலன்களை கொண்டவர்களுக்கு உள்ள சில குணநல அம்சங்கள். இவர்கள் எப்படி உருவாகிறார்கள்? உளவியல் ரீதியில் இது பற்றி பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் அடிப்படைக் காரணம் குடும்பம் என்பது அந்த ஆய்வுகள் வழி தெரிய வந் துள்ள உண்மையாகும். குடும்பம் என்றால், வெறும் வறுமையினால் வரும் பிரச்சினை இது வல்ல. அப்படி பார்த்தால் வறுமையில் உள்ள அத்தனை பேரும் இப்படி கொடு மைக்காரர்களாகவே இருக்க வேண்டும். ஆனால், வறுமையை விட குழந்தையைப் பெற்றெடுத்த தாய், தந்தையின் குணநலன்கள் முக்கியம். அதிலும், தந்தையின் குணநலன் மிகவும் முக்கியம். இதில் மரபணு உண்மைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்ட பையனின் தாத்தாவின் குணநலனுக்குக் கூட இதில் தொடர்பிருக்கலாம். மரபணு ரீதி யான அம்சங்களுக்கு இதில் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. அந்த பின்னணியில் வளரும்போது, அந்த பையனின் அப்பா ஒரு கோபக்காரராகவோ, தன் மனைவியை அடித்து துன்புறுத்தக்கூடியவராகவோ, குண்டர் கும்பல் தொடர்புடையவராகவோ, அல்லது எப்போதும் அடாவடித் தனச் செயலில் ஈடுபடுவதும், மற்றவர்களை மிரட்டுபவராகவோ இருப்பார். இதை அந்த பையன் சின்ன வயதிலிருந்தே பார்த்து வளர்கிறான். அடிப்படையில் பார்த்தால், முதல் 10 ஆண்டுகளில் ஒரு குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளர வேண்டும் என்பது உளவியல் உண்மை. அந்த காலக் கட்டத்தில் அக்குழந்தை எம்மாதிரியான ஒரு சூழலில் வளர்கிறதோ அந்தக் குழந்தையும் அதுவாகவே மாறிவிடுகிறது. குழந்தை வளர்ப்பு முறையும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம். பிள்ளைகளை பெற்றோர் அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பதும் இதற்கு மற்றொரு காரணமாகும். மகன் சிறிய தவறுகள் செய்யும்போது அதை மறைக்கும் பெற்றோர் அதிகம். அவனுக்காகப் போராடி, தவறை மறைக்க முயற்சிக்கும்போது காலப்போக்கில் அவன் பெரிய தவறுகள் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிறது. நான் என்ன செய்தாலும் எனக்கு பாதுகாப்பு என் குடும்பத்தில் இருக்கிறது என்ற ஒரு மனோநிலையை பிள்ளைகள் வளர்த்துக்கொள்கிறார்கள். பகடிவதையில் ஈடுபடும் பல்வேறு மாணவர்களை சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிட்டியது. அம்மாதிரியான சூழலில் குறிப்பிட்ட ஒரு மாணவனை விசாரித்தபோது அவன் சொன்ன பதில் அதிர்ச்சியடையச் செய்தது. ‘நாங்கள் வயது குறைவானவர்களாக இருப்பதால், நாங்கள் பிடிபட்டாலும் மேலே உள்ள எங்கள் தலைவர் எங்களை வெளியாக்கி விடுவார். எதற்கும் கவ லைப்பட வேண்டாம். தூக்குத் தண்டனை அளவுக்கு எதுவும் வராது என்று எங்கள் தலைவர் கூறியிருக்கிறார்’ என்று அந்த மாணவனிடமிருந்து பதில் வருகிறது. இது தப்பில்லையா? என்று கேட்டபோது, ‘தெரியும் சார். நாங்கள் உணர்கிறோம். ஆனால், என் அண்ணனை பாருங்க. அவர் சரியாகப் படிக்கக்கூட இல்லை. அவர் இன்று பி.எம்.டபள்யூ ஓட்டுகிறாரே. இது தவறுன்னு நீங்க சொல்றது சரிதான். ஆனால், இது எங்களை ஈர்க்கின்றதே. ஒரு பி.எம்.டபள்யூ ஓட்டும் வாழ்க்கை எனக்கும் வேண்டுமே. அதனால்தான் எனக்கு படிப்பு இல்லையென்றாலும் கவலை இல்லை சார்’ என்கிறான் அந்த மாணவன். ஆகவே, அந்த குடும்பத்தில் அவன் என்ன மதிப்புகளை கற்றுக்கொள்கிறான் என்ற கேள்வியே இங்கு எழுகிறது. நான் படித்து, உயர்ந்து, நல்ல நிலை மைக்கு வந்து, சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும், முன்னேற வேண்டும் என்ற நல்ல எண்ணங்களுக்கு அங்கே மதிப்பே இல்லை. தவறான வழி யில் பணம் சம்பாதிக்கும் ஒரு முன்மாதிரி அவன் வீட்டிலேயே இருக்கும்போது அவனிடமிருந்து எதனை எதிர்பார்க்க முடியும்? வீட்டில் வழிகாட்ட ஆள் இல்லாத பட்சத்தில் வெளியில் இதே மாதிரியான பாதிப்பு உள்ள வட்டத்தில் சேர்ந்து தனது ஆட்டத்தை தொடங்குவான். தாய், தந்தையர் ஆரோக்கியமான, பாசப்பிணைப்பு உள்ள ஒரு குடும்பத்தை உருவாகினால் எந்த பையனும் தவறான ஒரு வழிக்குப் போக மாட்டான். அவன் வறுமையில் வாழ்ந்தால் கூட எந்தச் சுழலிலும் தவறு செய்து பணம் சம்பாதிக்க முயற்சிக்க மாட்டான். ஆனால், அதில் பலவீனம் ஏற்பட்டு விட்டால் எதை வேண்டுமானாலும் செய்யலாம், எப்படியும் வாழலாம் என்ற தகவல் அவனைச் சென்று சேர்கிறது. சீர்குலைந்த குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள்தான் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது வழக்கம். இம்மாதிரியான பிள்ளைகளைதான் வெளியில் உள்ள குண்டர் கும்பல்கள் குறி வைத்து தங்கள் வலையில் சிக்கவைத்து விடுகின்றன. ஒரு தாமானுக்கு (குடியிருப்புப் பகுதி) ஒருவன் என்று மோப்பம் பிடிக்கும் நாய்களைப் போன்று அவர்களை நியமனம் செய்து விடுகின்றனர். கைச்செலவுக்கு பணம், தாய்லாந்து பயணம், இப்படி சலுகைகளை கொடுத்து அவர்களை அக்கும்பல் தலைவர்கள் வளர்க்கிறார்கள். இவர்களை திருத்தும் வழியில்லையா? ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த பொறுப்பு உள்ளது. இது நேரடியாகப் பெற்றோர் சம்பந்தப்பட்டது. ஒரு பெற்றோர் பிள்ளைகளை ஒரு மகிழ்ச்சியான சூழலில் வளர்த்தால் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது பற்றி அவன் சிந்திப்பான என்பது உளவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. பெற்றோரியல் இங்கு முக்கியமான பங்கினை ஆற்றுகிறது. பெற்றோர் பிள்ளைகளை எப்படி அரவணைக்கிறார்கள், அவனது தேவைகளை எப்படி உணர் கிறார்கள், அவனின் பிரச்சினைகளை எப்படி காது கொடுத்து கேட்கிறார்கள், அவனுக்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறார்கள் என்ற கவனிப்புதான் தேவையே ஒழிய மகிழ்ச்சியாக இருக்க பணம் கொட்டிக்கிடக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. இதுதான் அடிப்படை உறவு, அடிப்படை தேவை யும் கூட என்று கே.ஏ. குணா விவரித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்