(சுப்ரா) காஜாங், கார்களின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு பொது மக்களுக்காக புத்ராஜெயா போலீசார் வாகன பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பயனுள்ள பல குறிப்புக்களை வழங்கினர்.பயணத்தை நன்கு திட்டமிட்டு முன்கூட் டியே வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாது காவலர்கள் நடமாடும் இடங்களி லும் பொது மக்கள் அதிகம் உள்ள இடங்களிலும் வாகனங்களை நிறுத்துவது பயனாக இருக்கும். காரின் கதவு பூட் டப்பட்டிருப் பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 25 விழுக்காட்டு வாகன திருட்டுச் சம்பவங்களை காரின் கதவைப் பூட்டாததனால் நடந்தவை என போலீசார் கூறினர். காரின் அலாரம் எப்போதுமே இயக்க நிலையில் இருப்பதை காரின் உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். விலையுயர்ந்த பொருட்களை எப் போதும் காரில் வைப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மடிக் கணினி, நகைகள், ரொக்கப் பணம் போன்றவற்றை காரில் வைப்பதை தவிர்க்க வேண் டும் என போலீசார் ஆலோசனை தெரிவித்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்