(துர்க்கா) சிரம்பான், யூபிஎஸ்ஆர் அறிவியல் பாட தேர்வு வினாத் தாட்கள் கசிந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியர் எல்.சுப்பா ராவ் என்ற கமலநாதன் (வயது 36), எதிர்வாதம் செய்வதற்கு கால அவகாசம் தேவையென நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத் தில் கேட்டுக் கொண்டார். காலை 8.40 மணி யளவில் சிரம்பான் 2, செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் ஆசிரியர் சுப்பாராவ் எதிர்வாதம் செய்வதற்கு ஆகஸ்டு 8, 14 ஆகிய இரு தினங்கள் நீதிபதி ரமேஷ் கோபாலன் குறிப் பிட்டார். கடந்த மே மாதம் 25ஆம் தேதி புத்ரா ஜெயா மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 3 நீதிபதிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கில் 2 நீதிபதிகள் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் சுப்பாராவ் எதிர்வாதம் செய்யுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் சுப்பாராவ் எதிர்வாதம் செய்வதற்கு சாட்சிகள் அழைக்க வேண்டியிருப்பதால் போதுமான கால அவகாசம் தேவையென வழக்கறி ஞர் குலசேகரன் நீதிமன்றத்தில வலியுறுத்தியதை தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.செஷன்ஸ் நீதிமன்ற வழக் கில் அரசு தரப்பில் போதுமான ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால் ஆசிரியர் எல்.சுப்பாராவ் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பு மேல் முறை யீடு செய்தது. இவ்வழக்கு அப்பீல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதிக்குள் நீலாய், பத்தாங் பெனார் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் எல். சுப்பாராவ் அரசாங்க ரகசிய ஆவண சட்டவிதி 8(1)சி-இன் கீழ் 5 குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார். இவர் சார்பாக வழக்கறிஞர் குலசேகரன் ஆஜரா கியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்