(ப.சந்திரசேகர்) ஈப்போ, காவலாளியான கே.கோபிநாதனுக்கு (வயது 46) மரணம் விளைவித்த குற்றத்திற்காக இரு இந்திய ஆடவர்களுக்கு நேற்று இங்குள்ள உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி நண்பகல் 12.00 மணிக்கும் பிற்பகல் 1.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் லாலுவான் கிளேபாங் ரெஸ்து டுவா, மேடான் கிளேபாங் ரெஸ்து உணவகம் ஒன்றின் பின்னால் கே.கோபிநாதனை (வயது 46) கொலை செய்ததாக ஆர்.சரவணன் (வயது 35), கே. கணேசன் (வயது 47) ஆகிய இருவர் மீதும் குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. தங்களுக்கு எதிரான குற்றச் சாட்டை மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். கோமதி முன்னிலையில் நடைபெற்றது. இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டை பிராசிக்கி யூஷன் தரப்பில் தக்க ஆதாரங்க ளுடன் நிரூபித்ததைத் தொடர்ந்து எதிர் தரப்பில் இவர்கள் இக்குற்றத்தை புரியவில்லை என்பதற் கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் நிரூபிக்கவில்லை. இரு தரப்பின் வாதங் களை செவிமடுத்த நீதிபதி இவர்கள் இருவரும் இக் குற்றத்தை புரிந்துள்ளனர் என் பதை நீதிமன்றம் உறுதி செய்து இவர்களுக்கு மரண தண்டனை விதிப் பதாக தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் பிராசிக்கியூஷன் தரப்பில் ஹாரிஸ் ஓங் ஜெப்ரி, எதிர்தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.சரவணன், சரன்சிங் ஆஜரானார்கள். இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக ஏஎஸ்பி நிர்மலா செயல்பட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்