ஆறுமுகம் பெருமாள் சிப்பாங், சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சுங்கத்துறை அமலாக்கப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலமாக கானா நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் வெள்ளி ஐம்பது லட்சம் மதிப்புடைய அழுங்கு ஓடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இன்று பிற்பகல் மூன்றரை மணியளவில் இங்குள்ள கே.எல்.ஐ.ஏ. சுங்கத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கமளித்த கே.எல்.ஐ.ஏ சுங்கத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ஹம்சா பின் சுண்டாங், நேற்று 15ஆம் தேதி இரவு 9.50 மணி யளவில் கானா நாட்டிலிருந்து துர்கிஸ் விமானம் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய தீர்வையற்ற சரக்கு கிடங்கு பகுதிக்கு அழுங்கு ஓடுகள் பார்சல் வழி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது தொடர்பில் சுங்கத் துறையினர் தகவலை பெற்றதாக அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் விமான நிலைய தீர்வையற்ற சரக்கு கிடங்கிற்குச் சென்ற சுங்கத் துறையின் அமலாக்கப் பிரிவினர் மேற் கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அங்கு 16 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 393.50 கிலோ கிராம் எடையைக் கொண்ட அழுங்கு ஓடுகளை கைப்பற் றியதாகவும் இதன் சந்தை மதிப்பு வெள்ளி ஐம்பது லட்சம் எனவும் அவர் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டில் நான்காவது தடவையும் இம்மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது தடவையாக நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து மேலும் விவரித்த அவர் கைப்பற்றப்பட்ட அழுங்கு ஓடுகள் அடங்கிய 16 பெட்டிகளில் அம்பாங் பகுதிக்கு விநியோகிக்கப்படுவதற்கான முகவரி எழுதப்பட்டிருந்தது என்பதுடன் அது போலியான முகவரி என்பது முதல் கட்ட விசாரணையின் வழி தெரிய வந்துள்ளதுடன் இதனை கிலோ ஒன்றுக்கு 4 ஆயிரத்து ஐந்நூறு அமெரிக்க டாலருக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளதாக கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்