குவாந்தான், அரச மலேசிய விமானப்படையின் (ஆர்எம்ஏஎப்) ஹாக் (W8) ரக பயிற்சி போர் விமானம் குவாந்தான் விமானப் படைத்தளத்திலிருந்து 51 கிலோ மீட்டர் தூரத்தில் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரு வீரர்கள் மரணமுற்றனர். முன்னதாக அந்த விமானம் குவாந்தான் விமானப்படைத் தளத்திலிருந்து நேற்று காலை 11 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அரை மணி நேரத்திற்குப் பிறகு அது அந்த விமானப் படைத்தளத்துடனான தொடர்பை இழந்தது. சம்பந்தப்பட்ட விமானத்தில் பிஏஇஎப்கை கார்டியன் ராடார் எச்சரிக்கையைப் பெறும் கருவி பொருத்தப்பட்டிருந்தது. இரு இருக்கைகள் கொண்ட இவ்வகை விமானம் 2013 ஓப்ஸ் டவ்லாட் டின் போது லாகாட் டத்துவில் வான் வழி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது. மேஜர் யாஸ்மி முகமட் யூசோப் (வயது 39), மேஜர் ஹஸ்ரி சஹாரி (வயது 31) ஆகியோரே அவ்விமானத்தில் பயணித்த வீரர்களாவர். அவர்களின் உடல் கள் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டன. எனினும், விபத்துக்குள்ளான விமானம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்விமானம் குவாந்தானுக்கு வடக்கே பகாங்- திரெங்கானு எல்லையில் காணாமல் போயிருக்கலாம் என நம்பப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்