கோலாலம்பூர், கூந்தல் சிகிச்சைக்காக தாங்கள் வெ.3 லட்சத்தை செலவழித்து ஏமாந்ததுதான் மிச்சம் என்று இரு சகோதரிகள் புகார் செய்துள்ளனர். பெட்டாலிங் ஜெயா வில் உள்ள சம்பந்தப்பட்ட கூந்தல் பராமரிப்பு மையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக எலிசபெத் சோவ் என்ற 47 வயது பெண் நேற்று ம.சீ.ச புகார் மையத்தில் கூறினார். தனது கடன் அட்டையை 13 தடவை பயன்படுத்தி 264,048 வெள்ளியைச் செலுத்தியதாகவும், அதே சமயம் தனது சகோதரி மார்கிரெட் (56) வெ.30,823.73-ஐ கட்டணமாகச் செலுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அம்மையம் வழங்கிய பல்வேறு சலுகைகளுக்காக தாங்கள் இக்கட்ட ணத்தைச் செலுத்திய தாகவும் அவர் சொன்னார். இவ்வளவு பணத்தை செலவழித்தும் தங்கள் கூந்தலில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார். அழகு சிகிச்சை விளம்பரங் களை நம்பி பணத்தை விரயமாக்க வேண்டாம் என்று மசீச புகார் மையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ மைக்கல் சோங் ஆலோசனை கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்