கோலாலம்பூர், தனது சிந்தனையில் உருவான நாட்டின் தேசிய கார் தயாரிப்பான புரோட்டோன் நிறுவனத்தின் 49.9 விழுக்காடு பங்குரிமை சீன நிறுவனத்திற்கு வலுக் கட்டாயமாக விற்பனை செய்யப்பட்டது வஞ்சகமான பழிவாங்கும் செயலே என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். தன் மானம் முக்கியமல்ல. தன்மானத்தைவிட பழிவாங்கும் செயலே முக்கியம் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார். இந்த விற்பனையானது ஒரு பழிவாங்கும் செயல்தான். இதைவிட வேறு எதுவும் சொல்ல முடியாது என்று அவர் குறிப்பிட்டார். சீனா, ஜியாங்கைச் சேர்ந்த கீலி ஹோல்டிங்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு புரோட்டோன் பங்குரிமை 49.9 விழுக்காடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் புரோட்டோனுக்கு வழங்கப்பட்ட 150 கோடி வெள்ளி எளிய கடன், தமக்கு தெரிந்தவரையில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள அந்த நிறு வனத்திற்கு சென்றடைய வில்லை என்று துன் மகாதீர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் செய்து கொண்ட அந்த எளிய கடன் விண்ணப்பத்தை சில நிபந்தனைகள் அடிப்படையில் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியது. உபரி பாகங்களை விற்பனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கடனை செலுத்துவதற்காக தேசிய கார் உற்பத்தி நிறுவனத்திற்கு அரசாங்கம் உதவியது. அனைத்துலக அளவில் அந்த நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு இந்த கடன் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்