கெர்த்தே, தாய்லாந்து பிரஜைகள் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து லோரியுடன் விபத்துக்குள்ளானதில் மூவர் பலியான வேளையில், அறுவர் படுகாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த விபத்தில் பலியான மூவரின் முழு விவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. 41 வயதுடைய மாது அவசரச் சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டதுடன், நஸ்மி (வயது 16), ரொஹிதா (வயது 30), காடோ (வயது 53), வேன் ஓட்டுநர் முகமட் நஸ்ரி (வயது 41) ஆகியோர் டுங்கூன் பொது மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்த லோரியின் பின் புறத்தில் மோதியுள்ளது. இதனால் அந்த வேன் பலத்த சேதாரமாகியுள்ளது. அதில் பயணித்த அனைவரும் தங்களின் இருக்கையிலிருந்து எழ முடியாமல் சிக்கிக் கொண்டனர். வேனில் பயணித்தவர்கள் குவாந்தானிலிருந்து தாய்லாந்திற்கு திரும்பும் பொழுது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் இரு தீயணைப்பு வாகனங்களில் 10 தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்ததாக கெர்த்தே மாவட்ட தீயணைப்புப் படையின் தலைவர் அலியாஸ் லத்திவ் தெரிவித்தார். அங்கு சென்று பார்க்கையில் பயணிகள் அனைவரும் வேனின் இடுக்கில் சிக்கியிருந்தனர். சுமார் 15 நிமிட போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு வீரர் கள் அவர்களை வெளியே கொண்டு வந்துள்ளனர். இச்சம்பவத்தில் பலியானவர்களின் சடலம் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக் கப்பட்டதாக அலியாஸ் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்