img
img

அந்நியத் தொழிலாளர்களை பதியத் தவறினால் பிரம்படி.
வியாழன் 15 ஜூன் 2017 12:48:44

img

புத்ராஜெயா, தங்களிடம் வேலை செய்யும் சட்ட விரோத அந்நியத் தொழிலாளர்களை முதலாளிமார்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் குடிநுழைவுத்துறையிடம் பதிந்து கொள்ள வேண்டும்.அப்படி செய்யத் தவறுவோர் பிரம்படி தண்டனையை எதிர்நோக்குவர் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி நேற்று எச்சரித்துள்ளார். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்போருக்கு பிரம்படி தண்டனை அல்லது ஒவ்வொரு தொழிலாளருக்கும் வெ.10,000 அபராதம் விதிக்கப்படலாம் என கூறினார்.தங்களிடம் வேலை செய்யும் சட்டவிரோதத் தொழிலாளர்களை இ-கார்ட் முறையின் கீழ் பதிவு செய்து கொள்வதற்கு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரையில் குடிநுழைவு இலாகா வாய்ப்பு வழங்கியிருப்பதாக அவர் நினைவுறுத்தினார். இது தொடர்பாக பல முறை எச்சரித்து விட்டோம். ஆனால், அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் பலர், அத்தொழிலாளர்களை பதிவு செய்துகொள்ளாமல் இருக்கின்றனர். வரும் ஜூலை 1க்குப் பிறகு இவர்களை விரட்டிப் பிடிப்போம். கடைசி நேரத்தில் வந்து பதிவிடங்களில் பெரும் நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img