பெட்டாலிங் ஜெயா, பூச்சோங்கில் கடந்த ஆண்டு ஒரு சிறுமியை சித்ரவதை செய்ததாக நேற்று பூச்சோங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை 62 வயது மாது மறுத்து விசாரணை கோரியுள்ளார். வயதான மாது சிறுமியை பிரம்பால் அடிப்பதைக் காட்டும் வீடியோ படக்காட்சி அண்மையில்தான் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அந்த ஆறு வயது சிறுமியின் முகம், உடம்பு, கை கால்களில் பிரம்பைக் கொண்டு அடித்து துன்புறுத்தியதற்காக வி.தனவல்லி என்ற அந்த மாதின் மீது சிறார் சட்டத்தின் 31 (1)(பி) பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த மூத்த பிரஜை அந்தச் சிறுமியின் பாட்டி என நம்பப்படுகிறது. வீடியோவில் பதிவு செய்யப்பட்ட அந்தக் குற்றச்செயலை தனவல்லி தாமான் பூச்சோங் பெர்டானாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புரிந்ததாக கூறப்படுகிறது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த மாதிற்கு அதிகபட்ச அபராதத் தொகையாக 50,000 வெள்ளி அல்லது அதிகபட்சம் 20 ஆண்டுச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தனவல்லியிடம் குற்றப் பத்திரிகை தமிழில் வாசித்து காட்டப்பட்டது.செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முகமட் மொக்ஸானி மொக்தார் 10,000 வெள்ளி தனி நபர் ஜாமீனில் அனுமதித்தார். அடுத்த விசாரணைக்கான தேதியாக ஜூலை 14ஐ அவர் நிர்ணயித்தார்.குற்றம் கடுமையானது என்பதால் அந்த மூத்த பிர ஜைக்கு ஜாமீன் அனுமதிக்கக்கூடாது என்று துணை அரசு வழக்கறிஞர் (டிபிபி) சுலோஷனி விஜேந்திரன் இதற்கு முன்னர் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார். தனவல்லி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லாததால் ஜாமீனை அனுமதிக்கும்படி வழக்கறிஞர் சுராஜ் சிங் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.ஒரு மாது சிறுமியை பிரம்பால் அடிப்பதற்கு முன்னர் அந்தச் சிறுமியை உணவு உட்கொள்ள விடாமல் தடுப்பதை கடந்த வார தொடக்கத்தில் வெளியான ஓர் இரண்டு நிமிட 49 வினாடி வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தச் சிறுமியை தமிழில் ஏசியவாறே தொடர்ந்து பிரம்பால் அடித்ததுடன், அந்தச்சிறுமி சாப்பாட்டுத் தட்டில் இருந்து உணவை கொட்டி விட்டதாக வசை பாடினார். இந்த வீடியோ காட்சியைப் பார்த்த போலீசார் மறு நாளே அந்த மாதை கைது செய்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்