(ம.யோகலிங்கம்) காப்பார் இங்குள்ள இடைநிலைப்பள்ளி மாணவன் ஒருவனை அப்பள்ளி ஆசிரியர் காலணியால் அடித்ததாக நம்பப்படும் சம்பவம் குறித்து காப்பார் காவல் நிலை யத்தில் புகார் செய்யப்பட்டது. அலெக்ஸ் டேனியல் திவ்யநாதன் (வயது 14) நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் சம்பந்தப் பட்ட ஆசிரியருக்கு எதிராக காப்பார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் அப்பள்ளியில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் தன்னுடைய தலையிலும், உதட்டிலும் காலணியால் அடித்ததாக காப்பார் தாமான் ஆலம் ஞாத்தாவைச் சேர்ந்த அலெக்ஸ் டேனி யல் புகாரில் தெரிவித்துள்ளார். நேற்று மேற்பட்ட புகாரை தொடர் ந்து காப்பார் காவல் நிலையத்தார் அவரை சிகிச்சைக்காக கிள்ளான் பெரிய மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் ஒருவன் பள்ளிமுதல் மாடியிலிருந்து கீழே எறிந்த காலணியை தான் மீண்டும் மேலே தூக்கியெறிந்தபோது திடீரென அங்கு வந்த சம்பந்தப் பட்ட ஒழுங்கு நடவடிக்கை ஆசிரியர் தன்னை அந்த காலணியால் அடித்ததாக அலெக்ஸ் டேனியல் கூறினார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் எதையும் தீர விசாரிக்காமல் தன்னை காலணியால் அடித்ததாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதனிடையே, தனது செயலுக்கு அந்த ஆசிரியர் வருத்தம் தெரிவித்துக் கொண்டதாக தெரிய வருகிறது. இருந்தும் அந்த ஆசிரியரின் நடவடிக்கையை கண்டித்த அம்மாணவனின் பெற்றோர் இச்சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சிடம் முறையிடப் போவதாக கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்