img
img

பள்ளியில் துப்புரவுப் பணி தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் கிடைக்கவில்லை.
வியாழன் 15 ஜூன் 2017 12:18:26

img

(துர்க்கா) புத்ரா ஜெயா, இடைநிலை, ஆரம்பப் பள்ளிகளில் துப்புரவுப் பணி செய்யும் 42 தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் கொடுக்காத காரணத்தால் பரித விப்புக்குள்ளான தொழிலாளர்கள் கல்வி அமைச்சின் முன் மறியலில் ஈடுபட்டு புகார் மனு கொடுத்தனர். நேற்று காலை 10 மணியளவில் புத்ரா ஜெயா விலுள்ள கல்வி அமைச்சின் முன் திரண்ட 42 தொழிலாளர்கள் நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜ.அருள்குமார், செனவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா தலைமையில் புகார் மனு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வழங்கப்பட்டது. மந்தின் வட்டாரத்திலுள்ள 8 பள்ளிகளில் துப்புரவு வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு குத்தகையாளர் முறையாக சம்பளம் குறிப்பிட்ட நாளில் கொடுக்காமல் அடிக்கடி தாமதப்படுத்தி வந்ததுடன் கடைசியாக 3 மாத சம்பள பாக்கியும் தராததால் மிகுந்த சுமைகளுக்குள்ளாகி மறியலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு முன் சம்பளம் கிடைக்காத காரணத்தால் நெகிரி மாநில மனிதவள இலாகாவிடம் புகார் செய்து எந்தவித பயனும் இல்லை என்பதால் குத்தகை கொடுக்கும் கல்வி அமைச்சின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டதாக ஜ.அருள்குமார் விளக்கினார். வேர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை ஏப்பமிடும் குத்தகையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர் களுக்கு சம்பளப் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சுக்கு புகார் மனு கொடுத்திருப்பதாக பி.குணா குறிப்பிட்டார். மாத சம்பளம் முறையாக கிடைக்காததால் குடும்ப செலவுகளை ஈடுகட்ட கடன் வாங்கும் அவல நிலைக்குள்ளாகி பல்வேறான பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக சரளா (வயது 29) மிகுந்த சங்கடத்துடன் புகாரை முன் வைத்தார். நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யும் எங்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் தருவதில் இழுபறி செய்துவரும் குத்தகையாளர் மீது கல்வி அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஞ்சினி (வயது 40) கேட்டுக் கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img