ஜார்ஜ்டவுன், இளைஞர் நவீன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத் தியுள்ளனர். தாக்கப்பட்ட இளைஞர் மூளைச் சாவு நிலைக்கு ஆளாகும் அளவிற்கு அந்த குற்றவாளிகளின் செயல் அமைந்து இருந்ததாக அவர்கள் குறிப் பிட்டனர். நவீனுக்கு ஏற்படுத்தப்பட்ட காயங்கள் அவரை மூளைச்சாவு நிலைக்கு இட்டுச் சென்றிருப்ப தால், இதை ஒரு கொலை சம்பவ மாக வகைப்படுத்துவதில் போலீசார் மேலும் தாமதப்படுத்து வதற்கு காரணம் ஏதும் இருக்க முடியாது என்று ஷம்ஷெர் சிங் திந் கூறினார்.அவர் ஜார்ஜ்டவுனில் உள்ள ஒரு தனியார் பல்கலைக் கழகத்தில் சட்ட கல்வி போதித்து வருகிறார். மூளைச் சாவு நிலைக்கு ஆளாகி விட்டதாக மருத்துவ ரீதியாக குறிப்பிடப்படும் ஒருவர் மூளையின் அனைத்து செயல்பாடுகளையும் இழந்துவிடுவார். மூளைக்கான இரத்த ஓட்டமும் பிராணவாயு செல்வதும் நின்றுவிடும் என்றார் அவர். நவீனின் இப்போதைய மருத்துவ நிலவரம் என்ன என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால், மருத்துவ பரிசோதகர்கள் கூறுவதைப் போல் அவர் உண்மையில் மூளைச்சாவு நிலைக்கு ஆளாகி இருந்தால், போலீசார் இந்த சம்பவத்தை ஒரு கொலை என மறு வகைப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். எம்மாதிரியான மூளைச் சாவு என்பதை மருத்துவமனை அதிகாரிகள் கண்டிப்பாக விளக்க வேண்டும். சில நோயாளிகள் ஆழ்ந்த மயக்க நிலையில் இருக் கலாம் அல்லது இதர கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று ஷம்ஷெர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்