(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர்பாரு, இளம் ஆய்வாளர்களுக்கான அறிவியல் விழாவை நாடு முழு வதிலுமுள்ள தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களிடையே தொடங்கிய வேளையில் அந்த முயற்சி தமிழ்ப்பள்ளி மாணவர்களி டையே அறிவின் ஆற்றலை தூண்டிவிட பெரிதும் துணையாய் நிற்க வைத்துள்ளது. இந்த அறிவியல் விழா மூலம் பல புதிய புதிய கண்டுபிடிப்புகளை மாண வர்கள் அறிமுகப்படுத்தியுள்ள தையும் காண முடிகின்றது. அவ்வகையில் ஜொகூர் மாநில அளவிலான 2017ஆம் ஆண்டு இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா அண்மையில் தாமான் ஜொகூர் ஜெயாவில் நடைபெற்ற வேளையில் மாணவர்கள் தங்கள் அறிவியல் கண்டு பிடிப்புக்களை அறிமுகப்படுத் திய விதமானது பார்வையாளர் களை மட்டுமின்றி நீதி பதிகளை யும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது. நீதிபதிகளிடம் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்திய விதம் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன் வியக்கத்தக்க வகையில் பெருமளவில் உயர்ந் திருப்பதைக் காண முடிந்தது. கடந்த பாத்தாண்டுகளாக ஜொகூர் மாநிலத்தில் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவை தலைமையேற்று நடத்திவரும் தெங்காரோ சட்ட மன்ற உறுப்பினர் க.ரவீன்குமார் சாரல் படாத குடையை கண்டு பிடித்தது முதல் கணிதப் பாடம் தொடர்பான வகுத்தல் விளை யாட்டுப் பொருளை அறிமுகப் படுத்தியது உட்பட பங்குகொண்ட ஒவ்வொரு குழு மாணவர்களும் தங்கள் கண்டு பிடிப்பை அறிமுகப்படுத்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப் பிட்டார். ஜொகூர் மாநிலத்தின் 70 தமிழ்ப்பள்ளிகளில் 61 பள்ளி களிலிருந்து 69 குழுக்கள் இந்த விழாவில் பங்கு கொண்டது பெருமையாக இருந்தாலும் பங்கு கொள்ளாத மற்ற 9 பள்ளிக ளையும் அடுத்த ஆண்டு இந்த விழாவிற்கு அனுப்பி உதவ வேண்டும் என கே.ரவீன்குமார் கேட்டுக் கொண்டார்.இவ்விழாவில் 9 நீதிபதி களுடன் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஆசிரியர் எஸ்.மணி மாறன் ஜொகூர் மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்கள் ஆற் றலை வெளிப்படுத்தி தமிழ்ப் பள்ளிகளை மற்ற மொழிப் பள்ளி கள் திரும்பி பார்க்க வைத்துள்ள தாக குறிப்பிட்டார். நீதிபதிகளின் கேள்விகளுக்கு தடையின்றி பதில் கூறும் ஆற் றல் பெருமளவில் உயர்ந்திருப் பதை காண முடிந்ததாக குறிப் பிட்ட அவர் குறிப்பு புத் தகங்கள், அறிக்கை புத்தகங்கள் போன்ற வற்றை பயன்படுத்தாமலேயே மாணவர்கள் பதில் கூறும் விதம் வியப்பைத் தரும் வகையில் உயர்ந் திருப்பதாக குறிப்பிட்டார்.தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கடந்த காலத்தைப் போல் அல்லா மல் உலக அளவிலும் பங்கு கொண்டு தங்கள் திறன்களை வெளிப்படுத்தி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த விழாவை தொடக்கி வைத்த மாநில இளைஞர் விளை யாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சூல்கைர்னைன் கமிசான் ஜொகூரில் கடந்த பத்தாண்டுகளாக இந்த விழா நடைபெறுவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.2008ஆம் ஆண்டு இவ் விழாவில் பங்கேற்பாளராக கலந்து கொண்ட லோகன்யா அசோகன் விழாவிற்கான இயக்குநராக செயல்பட்டதுடன் விழாவினை சிறப்புடன் வழி நடத்தினார். இந்த விழாவின் வழி மூவார் ஜாலான் கலிடி துன் அமீனா தமிழ்ப்பள்ளி, ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்று தமிழ்ப்பள்ளிகள் புத் தாக்கப் பிரிவில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன.அதே வேளை மொத்தம் 20 பள்ளிகள் இரு பிரிவுகளில் வெற்றியாளர்களாக அறிவிக் கப்பட் டன. முதல் பிரிவின் 10 பள்ளிகள் தெமியாங் ரெஞ்சோங், கூலாய் பெசார், பெக்கோக் தோட்டம், ஜாலான் சியாலாங்-தங்காக், தங்காக் தோட்டம், ஊல்ஸ் தோட்டம், பாசிர் கூடாங், ஆர்.இ.எம் தோட்டம், துன் டாக்டர் இஸ்மாயில் தோட்டம், கோமாளி தோட்டம். இரண்டாம் பிரிவின் வெற்றியாளர்கள் மூவார்-ஜாலான் கலிடி, துன் அமீனா, கங்கார் பூலாய், ஜாலான் யாஹ்யா அவால், ரினி தோட்டம், பெர்மாஸ் ஜெயா, கூலாய் ஒயில்பால்ம், துன் அமீனா (2), தெப்ராவ் தோட்டம், பெலப்பா தோட்டம்.இரண்டாம் பிரிவிலுள்ள 10 பள்ளிகளும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு கொள்ளும் வேளையில் முதல் பிரிவில் முதன்மையாக வந்த பள்ளியும் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. ஜொகூர் எப்போதுமே ஜோரான மாநிலம் என்பதற்கேற்ப அறிவியல் விழாவிலும் ஜோரான ஜொகூர் தமிழ்ப்பள்ளிகள் என்பதை ஜொகூர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நிரூபிப்பர் என்பது திண்ணம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்