திண்டுக்கல் மலேசியா, சுங்கைபீசியில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒரு முடிதிருத்தும் நிலையத்தில் போலீசார் நடத்திய போதைப்பொருள் சோதனையின் போது கைது செய்யப்பட்ட ஒரு முடிதிருத்தும் தொழிலாளியான தன் கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று அவரின் மனைவி இங்குள்ள ஆட்சியரிடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தன் கணவர் கைது செய்யப்பட்டு 12 நாட்கள் ஆகிவிட்டன. எந்தவொரு விவரமும் தங்களுக்கு தெரியாமல் இருப்பதாக அவர் தனது மனுவில் குறிப்பிட் டுள்ளார். அந்த முடிதிருத்தும் கடையில் சோதனை செய்த போலீ சார் கடையில் போதைப் பொருள் இருப்பதாகக் கூறி, என் கணவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அதனை நாளிதழ்களில் வெளியான செய்தி மூலம் அறிந்தேன். எனது கணவர் முடிதிருத்தும் வேலை செய் வதற்காக மட்டுமே மலேசியா சென்றார். மேலும் இதுவரை, அவர் வேறு எந்த விதமான தவறும் செய்ததில்லை. எனவே, அவர் தவறு செய்வதற்கு வாய்ப்பு இல்லை. வேலைக்குச் சென்ற கண வருக்கு என்ன நடந்தது என தெரியாமல் நானும், என் குழந்தைகளும் தவித்து வருகிறோம். எனவே, மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள என் கணவரை மீட்டு, எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மனைவி தனதுமனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தொடர்பாக மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு தகவல் கொடுத்து விசாரிக்கும்படி ஆட்சியர் டி.ஜி.வினய், அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். சம்பவம் நடந்த அன்று, அந்த முடிதிருத்தும் கடையில் இரவு 8 மணியளவில் புக்கிட் அமான் போலீசார் சோதனையிட்ட போது 22 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருளை மீட்டதாக அறிவித்து இருந்தது. அதேவேளையில் அந்த முடிதிருத்தும் கடையில் வேலை செய்து வந்த மூன்று இந்தியப்பிரஜைகளையும் தாங்கள் கைது செய்ததாக அறிவித்து இருந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்