img
img

5 தோட்டங்களை விழுங்கிய மேம்பாட்டு திட்டத்தால் 250 குடும்பங்கள் தத்தளிப்பு.
புதன் 14 ஜூன் 2017 12:54:16

img

(பார்த்திபன் நாகராஜன் - தி.க. காளிதாசன்) கோலாலம்பூர் பத்தாங்பெர்சுந்தை அருகில் மேம்பாட்டு அலையினால் பாதிக்கப்பட்டுள்ள சுங்கை திங்கி, மிஞ்யாக், புக்கிட் தாகார்,மேரி, நைகல் கார்டனர் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த 250 குடும்பங்களுக்கு சொந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதால் தற்போது அவர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. மேரி, சுங்கை திங்கி, மிஞ்யாக், புக்கிட் தாகார், நைகல் கார்டனர் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த வீடுகளுக் காக சுமார் 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இத்தோட்டங்கள் கோல சிலாங்கூர், உலுசிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன.இந்தியர்கள் அதிகம் வாழ்ந்து வரும் இத்தோட்டங்கள் மலேசியாவில் மிகவும் புகழ் பெற்றவையாகும். பெர்ஜெயா குழுமத்திற்கு சொந்தமான நிலத்தில் இந்த 5 தோட்டங்களின் வீடுகள் அமைந்துள்ளன. இத்தோட்டங்களில் 245 இந்திய குடும்பங்கள் வசித்து வருகின்றன.நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப இத்தோட்ட நிலங்களில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள பெர்ஜெயா குழுமம் திட்டமிட்டது. இத்திட் டத்தால் தோட்டத்தில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் வீடுகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் அனைத்து குடும்பங்களுக்கு தரை வீடுகள் கட்டித் தரப்படும் என்று பெர்ஜெயா குழுமம் வாக்குறுதி வழங்கியது. தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த போதும், தற்போது மக்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கும் போதும் அவ்வாக்குறுதிகள் நிலை நிறுத்தப்படும் என்று அனைத்து தலைவர்களும் வாக்குறுதி வழங்கினர். ஆனால் இன்றைய தினம் வரை அம்மக்களுக்கான தரை வீடுகள் கட்டித் தரப்படவில்லை. அதே வேளையில் அத்தோட்ட நிலங்களை பெர்ஜெயா குழுமம், தாகார் மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்பனை செய்து விட்டது. இச்சூழ்நிலையில் தோட்டத்தில் வசித்து வரும் மக்களுக்கான வீடுகளை யார் கட்டித் தரப் போவது என்பது தான் தற்போதைய கேள்வியாகும் என்று பிஎஸ்எம் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் அருட்செல்வம் கூறினார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டித் தர வேண்டும் என்று பெர் ஜெயா குழுமத்திடம் பல முறை மகஜர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மக்கள் அமைதி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடமும் பல முறை மகஜர்கள் வழங்கப்பட்டன. அதற்கும் இதுநாள் வரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. தோட் டங்களில் வாழும் மக்கள் தங்களின் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்ற நோட்டீசை வழங்க மேம்பாட்டு நிறுவனம் தயாராக இருப்பதாக தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. ஆகவே தோட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் வரையில் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மேம்பாட்டு பணிகளுக்கும் சிலாங்கூர் மாநில அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது. இதனை மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும், ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவும் உறுதி செய்ய வேண்டும் என்று அருட்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார். இதனிடையே நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் மேரி தோட்ட பிரதிநிதியாக நாகப்பன், நைகல் கார்டனர் தோட்ட பிரதிநிதியாக வாசு, சுங்கை திங்கி தோட்ட பிரதிநிதியாக குமார், மிஞ்யாக் தோட்ட பிரதிநிதியாக முருகையா, புக்கிட் தாகார் தோட்ட பிரதிநிதியாக முகமட் அலி ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் பிரச்சினைகளை கூறினர். மூன்று தலைமுறைகளாக இத்தோட்டங்களில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். தரை வீடுகள் கட்டித் தருகிறோம் என்று பெர்ஜெயா குழுமத்தினர் வாக்குறுதி வழங்கினர். ஆனால் இதுநாள் வரை வீடுகளை கட்டி தரவில்லை. முதலில் வீடு கட்டித் தருவதாக கூறியவர்கள், பின் நஷ்ட ஈடாக 20 ஆயிரம் வெள்ளி தருவதாக கூறுகின்றனர்.வாக்குறுதியின் அடிப்படையில் அனைத்து மக் களுக்கும் தரை வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். இல்லையென்றால் எங்களின் போராட்டம் ஓயாது என்று அவர்கள் கூறினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img