பினாங்கு பினாங்கு மாநிலத்தில் தென்மேற்கு மாவட்டத்தின் தலைமை காவல் துறை தலைவராக சூப்ரிண்டெண்டன் எ.எ.அன்பழகன் அண்மையில் நியமனம் பெற்றார். 1958ஆம் ஆண்டுக்குப் பிறகு அப்பதவிக்கு நியமனம் பெற்ற தமிழராக சூப்ரிண்டெண்டன் எ.எ.அன்பழகன் வரலாற்றில் இடம் பெற்றார். கெடா மாநிலத்தை பூர்வீக மாக கொண்ட சூப்ரிண் டெண்டன் எ.எ.அன் பழகன், அரச மலேசிய காவல் துறையில் தனது ஆரம்ப பணியை போர்ட் டிக்சன் மாவட்டத்தில் ஒரு குற்றப் புலனாய்வு அதிகாரியாக தொடக்கி, சிரம்பான் தலை மையக அரச மலேசிய காவல் துறையில் 5 ஆண்டு காலம் பணிபுரிந்த வேளையில் 26 ஆண்டு காலமாக அரச மலேசிய போலீஸ் படையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. தாய்லாந்து பேங்காக்கில் மலேசிய நாட்டை பிரதிநிதித்து 4 ஆண்டு காலம் தூதரக காவல் படை அதிகாரியாகவும், 1996 தொடக்கம் 2001 ஆம் ஆண்டு வரை பிராந்திய தூதரக அதிகாரி யாக பணியாற்றிய அனுபவம் கொண்டுள் ளதையும் மலேசிய நண்பனிடம் விவரித்தார். இதனிடையே பினாங்கு மாநில அரச மலேசிய காவல்படை தலைமையகத்தின் நிர்வாக பிரிவின் தலைமை அதிகாரியாக 2015 தொடக்கம் 2017 வரை பணி யாற்றியதுடன்,கடந்த மே மாதம் 11 ஆம் நாள் 2017 அன்று பினாங்கு தென்மேற்கு மாவட்டத்தின் காவல் தலைவராக சூப்ரிண் டெண்டன் எ.எ. அன் பழகன் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் கீழ் 900 காவல் அதிகாரிகளுடன் காவல்படை உறுப்பினர்களும் பணியாற்றி வருகின்ற வேளையில் 10 போலீஸ் காவல் நிலையங்கள் அவரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றன. தென், மேற்கு மாவட்டத்தில் குற்ற செயல் சம்பவங்கள் குறைக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் எண்ணத்தில் உள்ள அச்ச போக் கினை களையவும்,மக்களுடன் இணைந்து செயலாற்றுகின்ற தன்மையை தென்மேற்கு காவல் படை சிறந்த சேவையை வழங்க உறுதி கொண்டிருப்பதாக சூப்ரிண்டெண்டன் எ.எ.அன்பழகன் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்