(ஆர்.குணா) டாமன்சாரா பெட்டாலிங் மாவட்டத்தில் அரா டாமன்சாரா பகுதியின் ஜாலான் பிஜேயு 1 A/5 பகுதியில் உள்ள ஒரு சிறு நிலப்பகுதியில் டத்தோ சாமி பல்லாண்டு கால மாக விவசாயம் செய்து வருகிறார். பல லட்சம் வெள்ளி செலவழித்து இந்த ரிசர்வ் பகுதியினை நன்கு பராமரித்து வருகிறார். பில்மோர் தோட்டத்தின் மண்ணின் மைந்தன் இவர். இவர் இந்த நிலப்பகுதியினை விட்டு உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று மாவட்ட நில இலாகா அதிரடி அறிவிக்கையினை அனுப்பியுள்ளது எந்த வகை யிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்கிறார் இங்குள்ள இந்திய மக்கள் மேம்பாட்டுத் தலைவர் பத்மா. சம்பந்தப்பட்ட பகுதியில் எந்தவொரு அரசாங்க வளர்ச்சித் திட்டத்திற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. இடத்தை விட்டு உடனடியாக வெளியேறு என்று தடாலடியாக அறிவிப்பு செய்வது சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நல்தோற்றத்தை நிச்சயம் பாதிக்கவே செய்யும். மாநில அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டுள் ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவும் ஊரறிய உலகறிய பறை சாற்றுவதற்கு எள்ளளவும் அர்த்தமில்லாமல் போய்விடும். மாநிலத்தின் நில வளங்களை நல்ல விதமாக பராமரித்து வரும் டத்தோ சாமி டோல் நிலம் என்ற நீதியில் பிரிமியம் கொடுத்து இந்த சிறிய நிலத்தை பராமரிக்க ஆயத்தமாக இருக்கிறார். உள்ளூர் மக்களின் சேவகனாக இருக்கும் டத்தோ சாமி தமிழ்ப் பள்ளியின் ஏழை மாணவர் களுக்கு பஸ் பயண வசதியும் செய்து கொடுக்கிறார். பிஜே செக்ஷன் 19இல் மற்ற இனத்தவர்கள் டோல் நிலப்பகுதி யினை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது மாநில அரசாங் கம். இரட்டை நிலைப்பாடு வேண்டாம். எனவே டத்தோ சாமி விஷயத்தில் மாநில அரசாங்கம் நீதியாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளும் என்று நாங்கள் பெரிதும் எதிர் பார்க்கிறோம். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற ரீதியில் மாநில அரசாங்கம் நடக்க முற்படலாகாது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்