ஈப்போ, போதைப்பொருள் குற்றப்புலனாய்வு இலாகாவில் பல்வேறு உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புக்கிட் அமானில் ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றம் செய்யப்படவுள்ளது.கூடிய விரைவில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் நேற்று தெரிவித்தார். எனினும், அது பற்றி மேலும் விவரிக்க அவர் மறுத்து விட்டார். நோன்பு பெருநாளுக்குப் பிறகு உயர்மட்ட நிலையில் நாங்கள் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யவிருக்கிறோம். போதைப்பொருள் புலனாய்வு இலா காவில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் கீழ் இதுவரை சுமார் 20 போலீஸ் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கீழ்மட்ட நிலையில் இந்நடவடிக்கை பூர்த்தியாகியுள்ளது. எனினும், இவ்விலாகாவின் கீழ் வேறு சில பிரிவுகளும் இருப்பதால் இன்னும் சில மாற்றங்கள் பாக்கி உள்ளன. போலீஸ் படையில் பணி, இட மாற்றம் சகஜம் என்றாலும், சில அசாதாரண சூழ்நிலைகளின் கீழும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம் என்று டான்ஸ்ரீ காலிட் கூறினார். 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் போதைப்பொருள் இலாகாவைச் சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள் ளனர். இவர்களில் ஒரு துணை சூப்ரிண்டெண்டன், ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்குவர். போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனிடையே, மலேசிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கடற்படை பயிற்சி அதிகாரியான ஜுல்ஃபார்ஹான் ஒஸ்மன் படுகொலை சம்பவம் பற்றி கருத் துரைத்த டான்ஸ்ரீ காலிட், இது பற்றி எதுவும் ஆரூடம் கூறாமல், போலீசார் தங்கள் புலனாய்வை மேற்கொள்ள அனுமதிக்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.பெக்கான் பாரு போலீஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஈப்போ மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு அவர் நிருபர்களிடம் பேசினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்