ஜெம்புல், நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் தீப் பிடித்த காரில் பயணித்த ஐவர் கருகி மாண்டதுடன் எழுவர் இந்த விபத்தில் பலியா கியுள்ளனர்.இந்த விபத்து நேற்று பிற்பகல் 2.20 மணியளவில் ஜாலான் லாடாங் ரிஸ்டா பாலோங்கில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் டிரெய்லர், புரோட் டோன் எக்ஸ்சோரா, புரோடுவா மைவி, டொயோட்டா வியோஸ் ஆகிய கார்கள் மோதிக் கொண்டன. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பண்டார்ஸ்ரீ ஜெம்புல், பாகாவ், சிம்பாங் பெர்தாங் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து மூன்று தீயணைப்பு வண்டியில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்ததாக நெகிரி மாநில தீயணைப்புப் படையின் இயக்குநர் நோரசாம் காமிஸ் தெரிவித்தார்.இச்சம்பவத்தில் எழுவர் பலியாகியுள்ளனர். புரோடுவா மைவி ரகக் காரில் பயணம் செய்த இருவர் காரிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு மாண்டனர். ஐவர் பயணித்த புரோட்டோன் எக்ஸ்சோரா ரகக் கார் டிரெய்லருடன் மோதியதுடன் தீப்பற்றி எறிந்துள்ளது. காருக்குள் சிக்கிக் கொண்ட ஐவர் தீயில் கரு கியுள்ளனர்.டிரெய்லருடன் நேருக்கு நேர் கார் மோதியதால் இரு வாகனங்களும் சேதமாகின. இதனால் அக்காரில் பயணித்தவர்களை காரிலிருந்து வெளியே கொண்டுவர சிரமம் ஏற்பட்டது. திடீரென காரில் தீப்பற்றியதால் ஐவரும் தீயில் கருகி மாண்டதாக அவர் சொன்னார். இந்த விபத்தில் பலியானவர்களின் சடலம் பிரேதப் பரிசோதனைக் காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்