(ஆர்.குணா) செலாயாங் இந்திய சமூகத்தில் நிலவி வரும் சமூக சீர்கேடுகள் களையப்பட வேண்டுமென்றால், இளைஞர்களுக்கு அவர்களின் சிறுவயதிலேயே சமய அறிவு விதைக்கப்பட வேண்டும் எனவும் அதற்குத் தேசிய அளவில் தமிழ்ப்பள்ளிகளில் சமயக்கல்வி கட்டாயப் பாடமாக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண் டும் எனவும் 16 அரசு சாரா பொது இயக்கங்கள் ஒன்றிணைந்து கோரிக்கையை முன்வைத்தன. தமிழ்ப்பள்ளிகளில் சமயக்கல்வி கட்டாயப் பாடமாக்கப்படுவது குறித்து நேற்று இங்குள்ள டியூன் ஸ்கில்ஸ் தொழிற்பயிற்சிக் கல்லூரியில் மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழ்ப்பள்ளிகளில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர்க்கும் அதிகமான மாணவர்கள் இந்துக்கள். எனவே, அவர்களுக்கான சமயக்கல்வி பள்ளியின் பாட வேளையிலேயே நடத்தப்படுவது அவசியமாகும். இதற்கான பாடத்திட்டங்களும் நூல்களும் தயாரிக்கப்பட்டுவிட்ட போதிலும் இது முழுமையாகத் தமிழ்ப்பள்ளிகளைச் சென்றடையவில்லை என மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசிய தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை தெரிவித்தார். இது குறித்து பல ஆண்டுகளாக அரசாங்கத்திற்குக் கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தாலும் இதுவரையில் எவ்வித பலனுமில்லை. எனவே, மாணவர் சமூகத்தைச் சிறுவயதிலேயே நல்வழிப்படுத்தக் கூடிய இத்திட்டம் குறிப்பிட்ட ஒரு சங்கத்தின் குரலாக அரசாங்கத்தை எட்டுவதைக் காட்டிலும் அரசு சாரா பல பொது இயக்கங்களின் ஒருமித்தக் குரலாகவும் கோரிக்கையாகவும் இருந்தால், அது எளிதாகவும் குறுகிய காலத்திலும் அரசாங்கத்தின் செவிகளைத் தட்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இன்று இயக்கங்கள் ஒன்றிணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே, 1975ஆம் கால கட்டத்தில் துன் மகாதீர் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் பள்ளிகளில் சமயக்கல்வி நடத்த எந்தவொரு தடையு மில்லை எனக் கூறப்பட்டதாகவும் அதற்கான பாடத்திட்டங்களையும் நூல்களையும் சுயமாகவே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பள்ளியின் பாட வேளைக்கு அப்பாற்பட்ட நிலையில் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டதாக மாமன்றத்தின் தேசிய துணைத் தலைவர் சோ.சுப்பிரமணி தெரி வித்தார். மேலும், மாணவர்களை நல்வழிப்படுத்த பள்ளிகளில் தற்போது கற்றுக்கொடுக்கப்பட்டு வரும் நன்னெறிக் கல்வி போதுமானதாக அமையாது. ஏனென் றால், கடந்த 30,40 ஆண்டுகளாக முதலாம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகம் வரையில் நன்னெறிப் பாடத்தைக் கற்பிக்கப்பட்டாலும் சமுதாயத்தில் எந்த வொரு மாற்றத்தையும் காண இயலவில்லை. இந்தச் சமயக்கல்விப் பாடத்திட்டம் இதற்கு நல்லதொரு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்ப்பள்ளிகளில் சமயக்கல்வி கட்டாயப் பாடமாக்குவதற்குத் தற்போது சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது எனவும் கல்விச் சட்டத்திலேயே (பிரிவு 4, பாகம் 10, உட்பிரிவு 51) அதற்கு இடமுள்ளது எனவும் இது குறித்து கூடிய விரைவில் கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் மற்றும் செடிக் அமைப்பின் தலைவர் டத்தோ பேராசிரியர் டாக்டர் என்.எஸ் இராஜேந்திரன் ஆகியோரைச் சந்தித்து கலந்தாலோசித்து முறையாகக் கடிதமும் வழங்கப்படும் எனவும் சந்திப்புக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்