(பெருஜி பெருமாள்) கோலாலம்பூர், தமிழகத்தின் ஐயனார் வயலை சேர்ந்த 40 வயது பாண்டியன் சுப்பிரமணியம் என்பவர் சுற்றுலா விசாவின் பேரில் குறுகிய கால வருகை மேற் கொண்டிருந்தார். செந்தூல் ஜாலான் கோவில் ஹிலிர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த இவருக்கு காய்ச்சல் கண்டது. பிறகு நெஞ்சு வலி யால் பாதிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. நேற்று காலை 9.30 மணியளவில் இங்குள்ள பொதுமக்களில் ஒருவர் பாண்டியன் இறந்து கிடக்கிறார் என்ற தகவலை மலேசிய உலக மனித நேய கழ கத்தின் தலைவர் த.கமலநாதனுக்கு, 016-9744404 என்ற எண்ணில் தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ வாகனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசாரும் வந்து பிரேதத்தை பரிசோதனை செய்தனர். தமிழகத்தில் உள்ள பாண்டியன் குடும்பத் தினருக்கும் தகவல் பறந்தது. த.கமலநாதன் பாண்டியனின் துணைவியார் கனகவல்லியிடம் விவரத்தை தெரிவித்தார். தனது கணவரின் உடலை தயவு செய்து தமிழகத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று கனகவல்லி கண்ணீர் மல்க த.கமலநாதனிடம் மன்றாடினார். பிரேதத்தை பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க மலேசிய உலக மனிதநேய கழகம் மளமளவென காரியங்கள் ஆற்றி வருகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்