பெட்டாலிங்ஜெயா இஸ்லாமிய மதபோதகர் ஸாகீர் நாயக்கின் கடப்பிதழை மீட்டுக் கொள்ள இந்திய அதிகாரிகள் தயாராக இருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது. பயங்கரவாதம் மற்றும் பண மோசடி செயல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்ட குற்றச் சாட்டுகளின் தொடர்பில் புலன் விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்ட போதிலும் அவர் இந்தியாவிற்கு திரும்பாமல் வெளிநாடுகளிலேயே தங்கி இருந்ததை தொடர்ந்து அவருக்கு தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இப்போது தடை செய்யப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆய்வு அற நிறுவனத்தின் (ஐஆர்எப்) நிறுவனராவார் ஸாகீர் நாயக். அந்த சர்ச்சைக்குரிய மத போதகர் அநேகமாக மலேசியா வில் இருக்கக்கூடும் என்றும் மலேசிய குடியுரிமையைப் பெற முயற்சி செய்யக்கூடும் என்றும் ஓர் உயர்மட்ட அதிகாரி இந்த நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.நாயக்கிற்கு எதிராக பிடிஆணை வெளியிடும்படி கோரி அனைத்துலக போலீஸாரை (இண்டர்போல்) என்ஐஏ அணுகிய சில வாரங்களில், என்ஐஏயின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. பிணையில் விடுவிக்க முடியாத பிடிஆணையை ஏபரல் 20ஆம் தேதி என்ஐஏ வெளியிட்ட பின்னர் மே மாதம் இண்டர்போலின் உதவி நாடப்பட்டது. 2016 நவம்பர் 18ஆம் தேதி, இந்திய உள்துறை அமைச்சின் உத்தரவிற்கு ஏற்ப என்ஐஏ தனது பம்பாய் கிளை அலுவலகத்தில் நாயக்கிற்கு எதிராக ஒரு குற்ற வியல் வழக்கை பதிவு செய்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்