கோலாலம்பூர் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் உட்கொண்ட 4 இடைநிலைப்பள்ளி மாணவர்கள், மேற்கல்விக்கூட மாணவர் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.தலைநகரிலுள்ள அடுக்குமாடி வீட்டில் கடந்த புதன் கிழமை டாங் வாங்கி காவல் நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இச்சோதனையை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்த 13 முதல் 30 வயதுடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அனைவரும் போதைப்பொருள் உட் கொண் டிருந்தது தெரியவந்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சுக்ரி கமான் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போதைப் பொருள் விநியோகஸ்தர் என போலீஸ் நம்புகிறது. சோதனை மேற்கொள்ளப்பட்ட வீட்டிலிருந்து 26 எராமின் 5 போதை மாத்திரைகள், 14 எக்ஸ்டாசி போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் மாணவர்களும் இளைஞர்களும் தனிப்பட்ட முறை யில் நடத்தும் அனைத்து விருந்து நிகழ்ச்சிகளையும் போலீசார் கண்காணித்து வருவதாக முகமட் சுக்ரி கமான் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்