(ப.சந்திரசேகர்) ஈப்போ, போலீஸ் படையில் சேவையாற்றி உடல் நலமின்றியிருந்த கணவர் இறந்த பிறகு வீட்டுக் கடனை அடைப்பதில் ஏற்பட்ட சிரமத்தைத் தொடர்ந்து வீடு ஏலத்திற்கு போன பிறகு எங்களை இங்கிருந்து வெளியேற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எங்களை மிரட்டுவது, தண்ணீரைத் துண்டிப்பது, மின் சாரத்தைத் துண்டிப்பது போன்ற தொல்லைகள் கொடுக்கப்பட்டன. இதனை சமாளித்து வந்த போது வீட்டின் மின்சாரத்தைத் துண்டிக்கும் போக்கை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். வழக்கு நிலுவையில் உள்ளதால் மின்சாரத்தை கடந்த ஒரு மாதமாக வழங்க டிஎன்பி மறுத்து வருகிறது என்று குடும்ப மாது எலிசபெத் (வயது 66) கூறினார். டிஎன்பிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு ஒரு முடிவுக்கு வரும் வரையாவது மின்சாரத்தை மனிதாபிமான அடிப்படையில் வழங்குமாறு நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். ஆனால் செவிமடுக்க மறுக்கின்றனர். நான் ஒரு இருதய நோயாளி. அதிகமான மருந்துகள் சாப்பிடுவதால் எனக்கு உடலின் சூடு அதிகரித்து அவதிப்படுகிறேன். எனக்கு ஒரு மகன் உள்ளார். அவரும் பகுதி நேரமாக சட்டம் பயில்கிறார். மின்சாரம் இல்லாததால் அவரும் அவதிப்படுகிறார். டிஎன்பியுடன் நாங்கள் பேச்சுவார்த்தை செய்த போது வீடு ஏலத்தில் போனதால் வீட்டின் உரிமையாளர் மாறிவிட்டார். உங்களுக்கு மின்சப்ளை வேண்டு மானால் உங்கள் பெயரில் டிபாசிட் செலுத்த சொன்னார்கள். நாங்களும் டிபோசிட் செலுத்தினோம். ஏற்கெனவே வீட்டிற்கு மின் சப்ளை வழங்கப்பட்ட போது டிபாசிட் செலுத்தியுள்ளோம். மொத்தம் இரண்டு முறை டிபாசிட் செலுத்தியும் மின் சப்ளை வழங்கப்படவில்லை என்று கூறினார். டிஎன்பியின் இப்போக்கை கண்டித்து வழக்கு பதிவு செய்தோம். இரண்டு முறை வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. வழக்கு இழுவையில் இருப்பதால் முடிவு தெரியும் வரை எங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். மனிதாபிமான அடிப்படையிலாவது இதனை செய்ய கோரினோம். ஆனால் எங்களுக்கு உதவ யாரும் முன் வர வில்லை மின்சாரம் இல்லாமல் கொசுக்கடியிலும், வெப்பத்திலும் அன்றாடம் அவதிப்படுகிறோம். போலீஸ் படையில் என் கணவர் சேர்ந்து சேவை யாற்றி இறந்து விட்டார். எங்களுக்கு ஏன்? தொல்லை கொடுக்கிறார்கள் என்று தெரிய வில்லை. வழக்கு தீர்ப்பு வரும் வரையில் எங்களுக்கு மின்சாரம் வழங்க கோருகின்றோம் என்று குடும்ப மாது எலிசபத் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்