img
img

கடைகளில் பிளாஸ்டி அரிசி விற்பனை!
ஞாயிறு 11 ஜூன் 2017 10:37:52

img

(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் கூலாயில் ஒரு பேரங்காடி மையத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து அந்த பேரங்காடி மையத்திலிருந்து பிளாஸ்டிக் அரிசி வகை பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா, கொரியா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த பிளாஸ்டிக் அரிசி வகைகள் ஆய்வுக்கூட சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அச்சத்தினால் உறைந்து போயினர். அரிசியுடன் பிளாஸ்டிக்கிலான அரிசியும் கலந்து விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் பரவி வருவதைத் தொடர்ந்து அரிசியை பயன்படுத்தும் பயனீட் டாளர்களிடையே கவலைகள் அதிகரித்துள்ளன. இந்த செயற்கை அரிசி குறித்து கூலாய் பண்டார் புத்ராவைச் சேர்ந்த எஸ்.பாஸ்கரன் (வயது 61), முதன் முதலில் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அதுகுறித்து தற்போது வாட்ஸ் ஆப்பில் நாள்தோறும் பரவி வருகின்றது. எஸ்.பாஸ்கரன் ஒரு நல்ல காரியம் செய்தார் என தோன்றுகின்றது. அவரின் புகாரின் காரண மாக சுகாதார இலாகா அதிகாரிகள் அவரின் வீட் டிற்குச் சென்று மாதிரி அரிசியை எடுத்துச் சென்றுள்ளனர். அதேவேளை போலீசார் அவரின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விவசாய இலாகாவிலிருந்தும் இன் னும் சில இலாகாக்களி லிருந்தும் கூட அதிகாரி கள் எஸ். பாஸ்கரனைத் தேடிச் சென்றுள் ளனர்.அரிசியின் பிளாஸ்டிக் கலவை என்பது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாகவே தற்போது திகழ்கிறது. இந்த சம்பவம் குறித்து தாமான் பூலாய் உத்தாமாவைச் சேர்ந்த பி.பெருமாள் தனது ஐயப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.அரிசியில் பிளாஸ்டிக் கலந் திருக்கிறதா என்பதை பயனீட்டாளர் எனும் முறையில் அறிந்து கொள்வதில் சிரமம் இருந்தாலும் மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக் காக அரசாங்கம் உடனடியாக இப்புகார் குறித்து விசாரணை மேற் கொண்டு முடிவைக் கூற வேண்டும் என பி.பெருமாள் கேட்டுக் கொண்டார். தாமான் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த ஐ.ஜெயசிம்மன் சில இறக்குமதியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையால் ஒட்டு மொத்த மலேசியர்களின் சுகா தாரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரித்தார்.மலேசியாவில் இறக்குமதி யாகும் அரிசிகளை கண்காணிக்கும் பொறுப்பு அரசாங்க முகவர் களுக்கு இருக்கின்ற காரணத்தால் இவ்விவ காரத்தை கூர்ந்து கவனித்து அவ்வாறு அரிசியில் பிளாஸ்டிக் கலவை இருக்கு மானால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.ஜெய சிம்மன் கேட்டுக் கொண்டார். இதே கருத்தை வலியுறுத்திய தாமான் யூனிவர்சிட்டியை சேர்ந்த எஸ்.ஆர்.மனோகர் செயற்கை அரிசி பரவுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அண்மைய தகவல்களின்படி அரிசியில் பிளாஸ்டிக் கலவை இருப்பது உண்மையாகவே இருக்கும் என தான் நம்புவ தாக குறிப்பிட்ட எஸ்.ஆர்.மனோகர், மலேசியாவில் அரிசியை இறக்குமதி செய்யும் நிறுவனங் கள் மீது அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். லீமா கெடாயைச் சேர்ந்த திருமதி வித்யா மோகன் மக்கள் சுகாதாரத்திற்கு பிளாஸ்டிக் அரிசி பெரும் மிரட்டலாக விளங்கும் என எச்சரித்தார். குறிப்பாக அரிசியை நாட்டிற்குள் இறக்குமதி செய்யும் விதிமுறைகளில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட வித்யா மோகன் பிளாஸ் டிக் பைகளையே பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டு வரும் இவ்வேளையில் அரிசியில் பிளாஸ்டிக் கலவை என்பது மிகவும் கவலை தரும் விஷயம் என எச்சரித்தார். பிளாஸ்டிக் அரிசியால் மக்களிடையே நோய்கள் பீடிக்கச் செய்து விடும் என எச்சரித்த தாமான் முத்தியாரா ரினியைச் சேர்ந்த எஸ்.பன்னீர் செல்வம் பிளாஸ்டிக் உபயோகம் புற்று நோயை கொண்டு வரும் என ஆய்வுகள் காட்டுவதாகவும் குறிப்பிட்டார். செயற்கை அரிசி அதிகரிக்கத் தொடங்கினால் மக் களுக்கே அது பெரிய பாதிப்பு ஏற்படுவதுடன் கிளினிக்குகளுக்கு அதிக ஆதாயம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார் எஸ்.பன்னீர் செல்வம் பிளாஸ்டிக் அரி சிக்கு முழுமையான தடையை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மக்களின் அன்றாட வாழ்வில் அரிசி ஒரு முக்கிய பொருளாக விளங்குவதாக குறிப்பிட்ட கோத்தா திங்கி தாமான் கோத்தா ஜெயாவைச் சேர்ந்த பி.தேவன் அந்த அரிசிக்குக் கூட சோதனை வரவிடக்கூடாது என கேட்டுக் கொண்டார். மக்கள் நலன்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு காரணமா னவர்களை தண்டிக்க வேண் டும் எனவும் வலியுறுத்தினார். இதனிடையே, இந்த பிளாஸ்டிக் கலவை அரிசி குறித்த தகவல் ஜொகூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. பிளாஸ்டிக் அரிசியா? உடனே புகார் செய்யுங்கள். எங்கும் எதிலும் கலப்படம் என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசியிலும் உள்ளது என்பது காலம் காலமாக நமக்கு தெரிந்த ஓர் உண்மை என்றாலும், பிளாஸ்டிக் அரிசியைப் பற்றி கேள்விப்பட்டிருகிறோமா?மலேசியாவை பொறுத்த வரையில், உள்நாட்டு அரிசி தயாரிப்பு வீழ்ச்சிக் கண்டிருப்பதால் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அண்மையில் தெரிவிக் கப்பட்டது. நாட்டின் அரிசி உற்பத்தியில் 30 விழுக்காடு இறக்குமதியாகும். எஞ்சிய 70 விழுக்காடு உள்நாட்டு விவசாயிகள் மூலம் கிடைக்கின்றது. அளவுக்கதிகமான உஷ்ணமும் நெல் விளைச்சலை பெருமளவு பாதிக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.இதனிடையே, அண்மைய காலமாக சமூக வலைத்தளத்தில் பரவலாக வெளிவரும் போலி அரிசிக்கு மலேசியாவில் இடமில்லை என்று சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். பாடிபெராஸ் நேஷனல் பெர்ஹாட் (பெர்னாஸ்) நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். பிளாஸ்டிக் அரிசி என்று வகைபடுத்தப்பட்டுள்ள மூன்று முத்திரை வகை அரிசி இங்கு விற்கப்படவில்லை என்று அவர் சொன்னார். போலி அல்லது பிளாஸ்டிக் அரிசி தொடர்பான புகார்கள் இருப்பின் <http://moh.spab.gov>. my என்ற அகப்பக்கத்தில் பொதுமக்கள் அவற்றை பதிவு செய் யலாம். அல்லது மாநில, மாவட்ட சுகாதார அலுவலகங் களில் புகார் செய்யலாம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img