ஷாஆலம் தீபா மெட்டல் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஆறுமுகத்திடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை மெய்க்காப்பாளர் ஒருவர் சுட்டு பிடித்துள்ளார். ஷாஆலம் ஸ்ரீமூடா பகுதியில் உள்ள அலையன்ஸ் வங்கியில் இருந்து டத்தோஸ்ரீ ஆறுமுகம் பணத்துடன் வெளியேறினார். அச்சமயத்தில் இருவர் டத்தோஸ்ரீயை திடீரென சுற்றி வளைத்தனர். பாராங்கத்தி, கோடரியுடன் டத்தோஸ்ரீயை தாக்க முயன்றதுடன் கையில் இருந்த பணப்பையையும் பறிக்க முயன்றனர். டத்தோஸ்ரீயிடம் இருந்த பணத்தை தான் அக்கொள்ளையர்கள் இலக்காக கொண்டுள்ளனர் என்பதை சுதாரித்துக் கொண்ட மெய்க்காப்பாளர் அவர்களை விரட்டினார். கையில் ஆயு தங்கள் ஏந்தியிருந்ததால் மெய்க்காப்பாளரால் டத்தோஸ்ரீயை காப்பாற்ற முடியவில்லை. உடனே டத்தோஸ்ரீயின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மெய்க் காப்பாளர் அக்கொள்ளையர்களை நோக்கி சுட்டார். இச்சம்பவத்தில் கொள்ளையர்களில் ஒருவருக்கு பின்புற காலில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது. இதனால் அக்கொள்ளையன் சம்பவ இடத்தில் சுருண்டு விழுந்தான்.துப்பாக்கி சூட்டை எதிர்பாராத மற்றொரு கொள்ளையன் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடியுள்ளான் என்று ஷாஆலம் மாவட்ட போலீஸ்படைத் தலைவர் ஷாபியன் மாமாட் செய்தியாளர்களிடம் கூறினார். பிற்பகல் 2.30 மணியளவில் மக்கள் அதிகம் நடமாடும் நேரத்தில் இக்கொள்ளையர்கள் துணிகரமாக இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் லேசான காயங்களுக்கு இலக்கான 58 வயதுடைய டத்தோஸ்ரீ ஆறுமுகமும், அவரின் மெய்க்காப்பாளரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.அதே நேரத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான கொள்ளையனும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டான் என்று அவர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் துப்பாக்கி தோட்டாக்கள், ஆயுதங்களை மீட்டனர். மேலும் தப்பித்து ஓடிய கொள்ளையனை கைது செய்ய உதவும் வகையில் அவ்விடத்தில் உள்ள ரகசிய கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே தப்பித்து ஓடிய மற்றொரு கொள்ளையனுக்கு துப்பாக்கி சூட்டு காயங்கள் ஏற்பட்டிருக்கும் என போலீஸ் நம்புகிறது.ஆகவே துப்பாக்கி சூட்டுடன் தங்களின் மருத்துவமனை, கிளினிக்களுக்கு வருபவர்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுக்க வேண்டும். இதன் மூலம் தப்பித்து ஓடிய கொள்ளையனை எளிதில் கைது செய்ய முடியும் என்று ஷாபியன் மாமாட் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்