(ஆர்.குணா) பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரத்ததானம், உடல் உறுப்பு தானம் முகாமை மஇகா தேசிய சேவை மையம் ஏற்பாடு செய்திருந்தது. தேசிய இரத்த வங்கி, தேசிய உடல் உறுப்பு தானம் மையம் ஆகியவை இந்த முகாமிற்கு முழு ஆதரவு நல்கின. முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பங்கு கொள்வார்கள் என மஇகா தேசிய சேவை மையத்தின் தலைவர் டத்தோ எம்.முனியாண்டி தெரிவித்தார். இனிவரும் காலங்களில் நாடு தழுவிய ரீதியில் மேலும் பல இரத்ததானம், உடல் உறுப்பு தானம் முகாமை ஏற்பாடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யவிருப்பதாக அவர் சொன்னார். நேற்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மஇகா தலைமையகத்திலுள்ள நேத்தாஜி மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் மஇகா உறுப் பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை யளித்ததுடன் இந்த இரத்ததானம், உடல் உறுப்பு தானம் முகாமை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்