புத்ரா ஜெயா, சபா, லஹாட் டத்துவினுள் 2013 ஆம் ஆண்டு ஆயுதமேந்தி ஊடுருவியதற்காக ஒன்பது பிலிப்பினோ தீவிரவாதிகளுக்கு மேல் முறையீட்டு நீதி மன்றம் நேற்று மரணதண்டனை விதித்தது. அவர்களுக்கு கடந்த ஆண்டு கோத்தா கினபாலு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை மேல்முறை யீட்டு நீதி மன்றம் மரணதண்டனையாக அதிகரித்து தீர்ப்பளித்தது. ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்த அரசாங்கம், அந்த ஒன்பது ஆடவர்களும் மாமன்னருக்கு எதிராக போர் தொடுத்து இருப்பதாலும் பீனல்கோட் பிரிவு 121 இன் கீழ் இது ஒரு குற்றம் என்பதாலும் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கும்படி கோரி இருந்தது. நாற்பத்திரெண்டு வயதிற்கும் 77 வயதிற்கும் இடைப்பட்ட அந்த பிலிப்பினோ ஆடவர்களுக்கு எதிரான இந்த ஏகமனதான தீர்ப்பை மூன்று பேரடங்கிய அமர்வுக்கு தலைமையேற்ற மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் ஸவாவிசாலே அறிவித்தார். அந்த ஒன்பது பேரும் தங்களுக்கு விதிக்கப் பட்டிருந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து முறையீடு செய்தனர். சுமார் 200 சூலு தீவிரவாதிகள் 2013 பிப்ரவரி 11 ஆம் தேதி சபாகடல் வழியாக நுழைந்து லஹாட் டத்துவில் தரையிறங்கினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்